திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், ராமாபுரம் கண்டிகை கிராமத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பாலாஜி என்ற ரசிகர் தனது சொந்தப் பணத்தில், பகுதி மக்களின் தேவைக்காக ரூ.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கிய
நியாயவிலைக் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்திய நாராயணன் கலந்து கொண்டு நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணம் வேதனை அளிக்கிறது.
மக்களுக்கு பல நன்மைகளை செய்தவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கும் எந்த கட்சிக்கும் இல்லை.
தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களித்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது நடக்கும். பாஜகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் செயல்படவில்லை என்றார். பின்னர், ‘தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ரஜினி ரசிகர் மன்ற தலைவர்கள் முடிவு செய்வார்கள்’ என பொடி வைத்தார்.
அதன் பின்னர், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மணிமண்டபம் அமைக்க தமிழ்நாடு அரசிடம் ரஜினிகாந்த் வலியுறுத்துவார் என சத்திய நாராயணன் தெரிவித்தார்.
P.K.M