Madras Kural

என்ஜின் பழுது- சென்னை புறநகர் ரயில்கள் தாமதம்…

ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த புறநகர் தொடர் வண்டியின் (ரயில்) இன்ஜின் கவரப்பேட்டை அருகே திடீரென பழுதானது. தகவலின் பேரில் அங்கு விரைந்த தொடர்வண்டி பராமரிப்பு பொறியாளர்கள், அவசரப் பராமரிப்பு பணி மூலம், அந்த தொடர் வண்டியை பொன்னேரி தொடர்வண்டி நிலையத்திற்கு கொண்டு வந்த பின்னர், இன்ஜினில் ஏற்பட்ட பழுதை முழுமையாக சரி செய்தனர். இதனை அடுத்து சில மணி நேரம் தாமதமாக பித்ரகுண்டா புறநகர் தொடர்வண்டி சென்னை நோக்கி சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக சென்னை மார்க்கத்தில் சுமார் ஒன்றேகால் மணி நேரம் தொடர்வண்டி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அண்மை காலமாக தொடர் வண்டிகள், இருப்புப் பாதைகள், உயர் அழுத்த மின் இணைப்பு கம்பிகள் ஆகியவற்றில் அடிக்கடி ஏற்படும் இது போன்ற பழுதுகளாலும், அதிகரித்து வரும் விபத்துகளாலும் தொடர்வண்டி பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் இடையே அச்சமும், வருத்தமும் ஏற்பட்டுள்ளது.

பொன்.கோ.முத்து

Exit mobile version