Madras Kural

காயிதேமில்லத் பிறந்தநாள்|திராவிட வெற்றிக் கழகம் மரியாதை|

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாஹிப் அவர்களின் 130 ஆம் பிறந்த நாளில், சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள நினைவிடத்தில் திராவிட வெற்றிக் கழகத்தின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் போரூர் ஹாஜா முகைதீன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மலர்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

தேசிய லீக் கட்சியின் தலைவர் ஹாஜியார் பசீர் அகமது, பொதுச்செயலாளர் பெருந்தமிழன் பேராசிரியர் அப்துல் காதர், திராவிட வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தென் சென்னை மாவட்ட செயலாளர் செல்வப்பாண்டியன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திராவிட ரத்னா இளவழகன், வடசென்னை மாவட்ட செயலாளர் GRP ஞானம், மாநில செயலாளர்கள் ஊனை பார்த்திபன், பாலசுப்பிரமணியம், தாம்பரம் மாநகர மாவட்ட செயலாளர் ராஜா முகமது, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வல்லம் கோபி, அரசியல் அறம் கூறும் அவை மாநில தலைவர் கவிஞர் கிருஷ்ணன், திருவள்ளுர் மாவட்ட அவைத் தலைவர் கைலாசம், சட்டத்துறை மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் தினேஷ், தேர்தல் பணிக்குழு மாநில துணை செயலாளர் தாயகம் சரவணன், இலக்கிய அணி மாநில துணை செயலாளர் நல்லமுத்து மற்றும் தில்லவன் எட்வின், செல்வ கோபிராஜ், சித்திரை பாண்டியன், சுல்தான், ஜாகீர், ஷேக் பரீத், ரகுபதி, யுவராஜ், பலராமன், பட்டாபி, சிறிதர், நவீன் பூபதி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்

மல்லை சி.ஏ.சத்யா
தலைவர்
திராவிட வெற்றிக் கழகம்

Exit mobile version