Madras Kural

போலீசை பிளேடால் அறுத்த வழிப்பறி கொள்ளையன் குண்டாஸில் அடைப்பு…

குற்றவாளி சைக்கோ பாரதி

சென்னையில் செல்போன் வழிப்பறியன்கள் நாளுக்குநாள் பெருகி வருகின்றனர். போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனத்தணிக்கை என்றெல்லாம் செயல்பாட்டில் வேகம் காட்டினாலும் வழிப்பறி நபர்களை ஓரளவே கட்டுப்படுத்துகிற நிலை இருக்கிறது.

சில நாள்கள் முன் சென்னை ஜெ.ஜெ.நகரில் ஒரு சம்பவம். செல்போன் வழிப்பறியில் ஈடுபட்டு வரும் நபர்களில் ஒருவரான பாரதி (எ) சைக்கோ பாரதியை ஆயுதப்படை போலீஸான ராஜேந்திரன் என்ற காவலர் விரட்டியுள்ளார்.

காயத்துடன் காவலர் ராஜேந்திரன்

செல்போனை வழிப்பறி செய்துவிட்டு தப்பித்து ஓடிக்கொண்டிருந்த சைக்கோ பாரதியை பிடித்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் காவலர் ராஜேந்திரன் விரட்டிக் கொண்டிருந்தார். வழக்கம் போலவே தயாராய் கையில் வைத்திருந்த பிளேடால், காவலர் ராஜேந்திரன் முகத்தை அறுத்து விட்டு சைக்கோ பாரதி ஓடமுயன்றார். முகத்தில் ரத்தம் கொட்டிய நிலையிலும் சைக்கோ பாரதியை விரட்டிப் பிடித்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் காவலர் ராஜேந்திரன் ஒப்படைத்தார். காவலர் ராஜேந்திரன் முகவாயில் சைக்கோ பாரதி, ஆழமாக அறுத்ததில் அந்த இடத்தில் காயம் அதிகமாகி ரத்தம் நிற்கவே இல்லை. ஆறு தையல் போட்ட பின்னரே ரத்தம் வெளியேறுவது நின்றது. இந்நிலையில் போலீசை பிளேடால் அறுத்துவிட்டு ஓடிய வழிப்பறி கொள்ளையன் சைக்கோ பாரதியை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஓராண்டு குண்டாஸில் அடைத்து உத்தரவிட்டார். சேரான்

Exit mobile version