Madras Kural

தேர்வு எழுதிய சிறைவாசிகள்!

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறையானது, சிறைவாசி களின் மறுவாழ்வு – மறு சீரமைப்பு (ம) விடுதலைக்கு பின் சமூகத்துடன் அவர்களை ஒருங்கிணைப்பதை உறுதி செய்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சிறைவாசிகள் 100 சதவீத கல்வி அறிவை அடையும் பொருட்டு தமிழ்நாடு அரசின் கல்வித் துறையுடன் ஒருங்கிணைந்து பல்வேறு திட்டங்கள் சிறைகள் (ம) சீர்த்திருத்தப்பணிகள் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட ஆரம்பப் பள்ளிகள், அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் மாவட்டச் சிறை ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன. அரசு பொதுத் தேர்வுகளை எழுத விரும்பும் சிறைவாசிகள், அரசு செலவில் தேர்வுகள் எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.
2021-2022-ஆம் கல்வி ஆண்டில், வெவ்வேறு சிறைகளை சேர்ந்த 7 பெண் சிறைவாசிகள் உட்பட 63 சிறைவாசிகள் 5.5.2022 அன்று துவங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். காவல் துறை தலைமை இயக்குநர்/ சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் (போலீஸ் டி.ஜி.பி.) கபில் குமார்சிங் வேண்டுகோளின் படி, சிறைவாசிகள் அந்தந்த சிறையிலேயே தேர்வு எழுதிடும் வகையில், (படம்) மாநில பள்ளிக் கல்வித் துறையால் எட்டு மத்திய சிறைகள், தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!

-ஏ.எஸ்.ராஜ் –

Exit mobile version