Madras Kural

ஆயுள் கைதிகள் மரணம் – தேவை நீதி விசாரணை : தடா அப்துல்ரஹீம்

வீரப்பன் சகோதரர் மாதையன் மரணமா அஜாக்கிரதை கொலையா ? சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் அடிக்கடி மரணத்திற்கு காரணம் என்ன ? தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ஜெ. அப்துல்ரஹீம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை :

மாதையன் அவர்கள் ஆயுள் தண்டனை கைதி அவரது உயிருக்கு பாதுகாப்பு கொடுப்பது சிறையின் கடமை அவரது உடல்நிலை மோசம் என்று சிறை மருத்துவர்கள் ஆலோசனை கூறி இருப்பாங்க, சிறை அதிகாரிகள் அவரை உடனே விடுதலை செய்து இருக்க வேண்டும் அல்லது அவரது வயது காரணமாக அவரை விடுதலை செய்து இருக்க வேண்டும் ஆனால் விடுதலை செய்யவில்லை ஏன் ?

தடா அப்துல் ரஹீம்

ஆம் ! அரசியல் ரீதியாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அடிக்கடி மாரடைப்பு மற்றும் உடல்நலம் சரியில்லாமல் மரணம் அடைவது தொடர் கதையாகவே உள்ளது. ‌ நன்னடத்தை விதிகளை பின்பற்றி அறிஞர் அண்ணா பிறந்த நாள் எம்ஜிஆர் பிறந்த நாள் என்று திமுக அதிமுக ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்கிறீர்கள் ஆனால் அரசியல் ரீதியாக ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்வது இல்லை ‌..

உதாரணமாக இதுவரை சுமார் 20 க்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் சிறையில் மரணமடைந்துள்ளார்கள் தஸ்தகீர் பாய், சபுர் ரஹ்மான், தடா ஓஜீர், ரீஸ்வான் மற்றும் தென்தமிழன், நடராஜன், மாதையன் உட்பட நிறைய பேர் சிறையில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை சரியாக அளிக்காமல் உயிரிழந்தனர். ஆகவே சிறையில் ஒருவர் உயிரிழந்தார் என்றால் அதற்கு முழு பொறுப்பு சிறை அதிகாரிகள் மட்டுமே- காரணம், ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரும் சிறைப் பிள்ளைகளே. மாதையன் மரணம் சிறை அதிகாரிகளின் அலட்சிய போக்கு நிச்சயமாக மறைந்து உள்ளது என்பதை தமிழக அரசு உணரவேண்டும். தொடரும் சிறை மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலிறுத்துகிறோம். – இவ்வாறு
தடா ஜெ அப்துல் ரஹீம் அறிக்கையில் கூறியுள்ளார்.

Exit mobile version