சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சிறைத்துறை தலைமையகத்தில் புதிதாக ரூ. 49.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டளை- கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. காணொளி திரை வசதி கொண்ட இந்த மையத்தை தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப்
பள்ளிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் பூஜாரி, சிறைத்துறை பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் சிறை பாதுகாப்பை மேம்படுத்தவும், சிறைக்குள் சிறை வாசிகளின் நடமாட்டம், கண்காணிப்பு, சிறை ஊழியர்களின் பணி குறித்த கண்காணிப்புப் பணிகள் சிறக்கும்.
அனைத்து மத்திய சிறைகளிலும், பெண்களுக்கான சிறப்பு சிறைகளிலும் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களில் இருந்தும் நேரடி ஒளிபரப்புகளை மையத்தின்
காணொளி திரையில் காட்சிப்படுத்த முடியும்.
அண்மையில் காவல் துறைக்கு வாங்கிய உடலில் பொருந்தும் நுண்ணிய கேமராக்களின் நேரடி காட்சி வீடியோ பதிவுகள் இந்தத் திரையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் காணொளி திரை ’3×3 (9) மேட்ரிக்ஸின் 55’ காணொளி காட்சிகள் 24×7 நேரமும் செயல்படும். வீடியோ சுவரைக் கட்டுப்படுத்தும் மென்பொருளில் உயர்நிலை வீடியோ பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு
உட்பதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஆர்வமுள்ள விஷயங்களில் விழிப்பூட்டல்களை உருவாக்கும் திறன் கொண்டது. ஒவ்வொரு சுழற்சி முறையிலும் 2 அதிகாரிகள் அடங்கிய
பிரத்யேக சிறை அதிகாரிகளின் குழு 3 சுழற்சி முறையாக 24 மணி நேரமும்,
காணொளி திரையை பார்க்க கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில்
இருப்பார்கள். இது ஒரு தொழில்நுட்ப ஆய்வாளரின் கீழ் செயல்படும். அவருக்கு உதவி தொழில்நுட்ப
ஆய்வாளர் உதவி செய்வார். கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் சிறைத்துறை தலைமையகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு சிறைச்சாலை களின் நேரடி நிகழ்வுகளை பார்க்கவும், தேவைப்பட்டால் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவும் உதவும்.
பொன்கோ.முத்து