சென்னை பிரஸ் கிளப் தலைவரும், டைம்ஸ் ஆஃப் இன்டியா ஆங்கில நாளேட்டின் க்ரைம் பிரிவு அசிஸ்டெண்ட் எடிட்டருமான அ.செல்வராஜூக்கு ‘மனித நேய இதழியலாளர்’ விருது வழங்கப் பட்டுள்ளது. நாடெங்கும் நடந்து கொண்டிருக்கும் சிறார்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் சிறுமியர், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், அதைத் தொடர்ந்து நடக்கும் கடத்தல் நிகழ்வுகளுக்கு எதிராக அ.செல்வராஜின் ‘பேனாமுனை’ தாக்குதல் எப்போதுமே உறுதியாய் இருந்துள்ளது. நாடு முழுவதும் ஒருமித்த சிந்தனையோடு பெண்கள் – சிறுமியருக்கு எதிரான குற்றச் செயல்களை எதிர்த்தும் அவர்களை பாதுகாக்கும் பொருட்டும் செயல்பட்ட பத்து பத்திரிகையாளர்களை என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று தெரிவு செய்தது. அந்தவகையில் தெரிவு செய்யப்பட்ட. பத்திரிகையாளர்கள் பத்து பேருக்கும், விழாவொன்றில் தெலங்கானா (ம) புதுவை மாநிலங்களின் ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் விருதுகளை வழங்கி மகிழ்வை தெரிவித்துக் கொண்டார். ந.பா.சேதுராமன்