திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஈச்சங்குழி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ துலுக்காணத்தம்மன் திருக்கோவிலின் 31- ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று பெருந்திரளான பெண்கள் அங்குள்ள நாகாத்தம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்தனர்.
பின்னர், ஊர்வலமாகச் சென்று துலுக்கானத்தம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர் நிகழ்வாக அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீப ஆராதனைகள் நடைபெற்றன. ஆடி திருவிழாவின் நிறைவாக வருகிற 20-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.
பொன்.கோ.முத்து