Madras Kural

பொன்னேரி : அம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ செல்ல மாரியம்மன் திருக்கோவில் மகா குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சயனா வரம் கிராமத்தில் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அப்பகுதி மக்கள் அருள்மிகு ஸ்ரீ செல்லமாரியம்மன் என்ற திருப்பெயரில் கோவில் ஒன்றை கட்டியுள்ளனர். இதன் குடமுழுக்கு விழாவிற்கான யாக கலச பூஜை கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்தது. நிறைவு நாளான இன்று சிவாச்சாரியார்கள் முக்கிய புண்ணிய நிதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தை கொண்டு அருள்மிகு ஸ்ரீ செல்ல மாரியம்மன் திருக்கோவில் மகா குடமுழுக்கு விழாவை வெகு சிறப்பாக நடத்தி வைத்தனர்.

பொன்கோ. முத்து

Exit mobile version