Madras Kural

பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண
பெருமாள்கோவில் சித்திரை தேரோட்டம் !

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்து தினங்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்று விழா கடந்த 16ம் தேதி நடைபெற்றது.


அடுத்து ஐந்தாம் நாளான நேற்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் சந்திப்பு உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று அலங்கரிக்கப்பட்ட விஷ்ணு பவன ரத்தம் என்ற திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய கரிகிருஷ்ண பெருமாள், சண்டை மேளம் முழங்க பக்தர்கள் படை சூழ முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரும் திரளான மக்கள் இதில் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் இழுத்துச் சென்றனர். தேரோட்டத்தின் காரணமாக நகரின் முக்கிய வீதிகளில் தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, தேர், கடந்த பின்னர் மின் வினியோகம் வழங்கப்பட்டது.
-தேனீஸ்வரன் –

Exit mobile version