Madras Kural

பொங்கல் பரிசு -அப்பாவு விளக்கம்!

தமிழ்நாடு அரசின் வெள்ளநிவாரண உதவித் தொகையை பாஜக தலைவர் அண்ணாமலை குடும்பத்தில் வாங்கி விட்டதாக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு பேட்டி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கும்மிடிப் பூண்டியில் அனுமதி இன்றி செயல்படும் தொழிற்சாலைகள் தொடர்பான கேள்விக்கு, “தமிழகத்தில் தொழிற்சாலைகள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதாகவும் வட மாநிலங்களில் அத்தகைய அனுமதி ஏதுமின்றி தொழில் நிறுவனங்கள் இயங்குவதாகவும் குட்கா பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அங்கிருந்து தான் கடத்தி வரப்படுவதாகவும் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் யாரும் ஜிஎஸ்டி வரி செலுத்துவதில்லை எனவும்
பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களிடமிருந்து திரட்டப்படும் பிரதமர் நிவாரண நிதி  பாஜக அல்லாத மாநில அரசுகளை கவிழ்த்து அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்காக பயன்படுத்தப் படுவதாகவும்,

விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவை தனியாருக்கு மோடி அரசு தாரை வார்த்து விட்டதாகவும், பொங்கல் தொகுப்புடன் கூடிய ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பெரும்பாலோருக்கு போய் சேரவில்லை என்ற மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு தவறு- அவரது வீட்டம்மாவே அதை வாங்கி விட்டாங்க, உங்களுக்குத் தெரியுமா என கிண்டல் அடித்தார்.
மேலும் தமிழ்நாட்டில், தனக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை என இதுவரை யாரும் கூறவில்லை என்றார்.

P.K.M.

Exit mobile version