Madras Kural

நீலகிரி பசுமையும் போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரும்…

பெர்ஃபார்மென்சின் மறுபெயர்
பிரபாகர் ஐ.பி.எஸ். என்கின்றனர், குளு குளு நீலகிரி மக்கள். நீலகிரி மாவட்ட காவல்துறையினரின் மனமும் அதையே சொல்கிறது.

நீலகிரி மாவட்டம் நீண்ட இடைவெளியில் மனித நேயமும் கருணையும் கழிவிரக்கமும் கொண்ட ஒரு காவல் கண்காணிப்பாளரை கண்டு பெருமையில் பூரித்து நிற்கிறது இன்று.

நேர்மையும், நெஞ்சுரமும், ஆற்றலும், பணியில் அர்ப்பணிப்பும் கொண்ட உயரதிகாரிகளை அத்தி பூத்தாற்போல மிக அரிதாகத்தான் காணமுடியும் காவல்துறையில்.

நான்கே மாதங்கள்தான் (4.1.2023) பிரபாகரன் இந்த நாற்காலியில் அமர்ந்தது, ஆனால் பெர்ஃபார்மன்சால் பின்னியெடுத்து, நான்காண்டு பணிக்கான விதைவிதைத்து நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறார் நீலகிரி மாவட்டத்தை!

லோக்கல் போலீசார் பொதுமக்களின் குறைகளை காதில்போட்டுக் கொள்ளாமல் பெயரளவில் விசாரணை என்ற பெயரில் வழக்குகளை முடித்து விடுவதிலேயே (CSR) மும்முரம் காட்டுவார்கள்.

உள்ளூர் பித்தலாட்டங்கள் மொத்தமும் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் மூலம் போலீஸ் எஸ்.பி.பிரபாகரன் காதுக்கு எட்டியவுடன் அதிரடியாய் தொடங்கியது, மறுவிசாரணை (Re enquiry) ஃபார்முலா! அதற்கேற்ற சிறப்பு முகாம்களை, மாவட்டம் முழுவதற்குமாய் முழுவீச்சில் அரங்கேற்றினார், எஸ்.பி. (Superintendent of police Nilgiry) பிரபாகர் ஐ.பி.எஸ்.,

கோடு கிழித்தால் எல்லை மீறாமல் செய்து முடிக்கும் காவல் துறையின் அங்கத்தினர் நூறுபேர் இருந்தாலும் தாமே அதிரடியில் களமிறங்கினார் நேரடியாகவே.

நிவாரணம் கிடைக்காமல் நீண்ட நாட்கள் போராடிய மக்களுக்கு இவரது மறு விசாரணை முகாம், மாவட்டத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை பிரச்சினையும் கண்ணீருமாய் கதறி அழுதபடி மாவட்டத்தில் எங்கு காலடி அடியெடுத்து வைத்தாலும் மக்களுக்கு அதே வேகத்தில் அதிரடி நிவாரணம் கிடைத்து விடுகிறது என்பது எத்தனை மகிழ்வான விஷயம்.

கண்ணில் நீர் மல்க போலீஸ் எஸ்.பி. (காவல் கண்காணிப்பாளர்) யைப் பார்த்து கைகூப்பி கும்பிட்டு நன்றி சொல்வது நீலகிரி மாவட்ட DPO வின் வரலாற்றில் இதுவரை அரங்கேறாத அதிசயம்.

மக்களின் குறைகளை காதில் போட்டுக் கொள்ளாத காவல் அதிகாரிகளை, எஸ்.பி., பிரபாகரனின் மறு விசாரணை முகாம் மிரட்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகங்களிலும் இதேபோல் முகாம்கள் நடப்பதை மறுப்பதற்கில்லை. புன்னகை மாறா இன்முகத்தோடு நடக்கும் நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலக குறைதீர்ப்பு முகாம், முகாம்களில் மகுடம் வைக்கப்பட்ட முகாம் எனலாம்.

இந்திரகாந்த்

Exit mobile version