Madras Kural

போலீஸ் மருத்துவ முகாம்… பெற்றோர் 400 சிறார் பங்கேற்பு!

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் பாய்ஸ் (சிறார்) கிளப் சிறார்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சென்னை மேற்கு போலீஸ் இணை கமிஷனர் ராஜேஸ்வரி தலைமையில், அண்ணாநகர் துணை கமிஷனர் சிவபிரசாத் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். காவல் சிறார்- சிறுமியர் மன்றத்தினருக்கு (Police Boys and Girls Club) நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 400 பேர் பங்கேற்றனர். நடத்தப்பட்டது.


சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும், (GCP-Pollce Boys and Girls Club) புதுப்பொலிவுடன் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் நீட்சியாக காவல் சிறார் – சிறுமியர் மன்ற மேற்பார்வை அதிகாரி (Nodal Officer) யான இணை கமிஷனர் ராஜேஸ்வரி தலைமையில், எம்.கே.பி நகர், அரும்பாக்கம், கோயம்பேடு ஆகிய காவல் எல்லையில் வரும் பாய்ஸ் கிளப் உறுப்பினர்கள் முகாமில் பங்கேற்றனர். சிறார்களோடு அவர்தம் பெற்றோர்களுக்கு நலம் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை மற்றும் பீ -வெல் ஆகிய மருத்துவமனைகளின் மருத்துவக் குழுவினர் உதவியுடன் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் கண் மற்றும் உடல் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. பங்கேற்ற சிறார்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் அப்போது வழங்கப்பட்டது.

– விகடகவி எஸ். கந்தசாமி –

Exit mobile version