Madras Kural

பஞ்சாப் கட்டும், பென்னிக்ஸ்- ஜெயராஜ் இறப்பும்|

போலீஸ்ல, ‘பஞ்சாப்கட்டு’ ன்னு ஒன்னு கட்டுவாங்க. போட்டுத்தள்ற அளவுக்கு கொடூர குற்றப்பின்னணியை கொண்ட ஆட்களுக்கு மட்டுமே அப்படியான ‘கட்டு’ இவ்விடம் கட்டப்படும்ங்கறதுல ரொம்ப உறுதியா இருந்தாங்க. கால்களை அகல விரிச்சு வெச்சு ‘இடைவெளி’ ஏரியாவுல நாலு ஜோடி பூட்ஸ் காலு, லத்திங்க நாலுன்னு செய்ற வேலைப்பாடுக்குப் பெயர்தான் பஞ்சாப்கட்டுன்னு சொல்லுவாங்க.

அதுக்கு முன்னால குதிகால் நரம்பை நசுக்கியோ, கட் பண்ணி விட்டோ, நடையை முடக்கிப்போடற வேலைதான் நடைமுறையில் இருந்ததாம். நரம்பை நசுக்கியும் கட் பண்ணி விட்டும் தண்டனையை அனுபவிச்ச Innocent ஒருத்தரு ஆதாரப்பூர்வமா கோர்ட்ல போய் மொத்தத்தையும் கொட்டி அழ – நரம்பு கட்டு ‘கட்’ ஆகி, அதுக்கு மாற்றா, பஞ்சாப்கட்டு Introduce ஆச்சு.

சில நேரங்களில் அந்த மாதிரி டேஞ்சர் ‘கட்’ டை பெனிக்ஸ் – ஜெயராஜ் மாதிரியான Innocent களுக்கும் கட்டி விட்டுடறாங்க. ஹெட் கான்ஸ்டபிள் ரேவதியம்மா ஸ்டேட்மெண்ட் பாக்கும் போது பெனிக்ஸூக்கும் ஜெயராஜூக்கும் பஞ்சாப்கட்டு கட்டுனது Confirm ஆகுது. அரசியலில் ஆகாத ஆளை பழிவாங்க போலீசை துணைக்கு வைத்துக் கொண்டு இப்படிப் பல சம்பவங்கள் நடந்துள்ளன.

2002 -என்று நினைவு. உள்ளாட்சித் தேர்தல் நேரம். வாக்குச்சாவடி கைப்பற்றும் மோதலோ, தடுக்கும் எதிர்மோதலோ அந்த சம்பவம். பெட்ரோல் குண்டுவீசி தாக்க முயன்றதாக உடன்பிறப்பு ஒருவர்மீது புகார். திமுகவுக்காக வேலை பார்த்த வடசென்னை ஆர்.கே. நகர் தொகுதி உடன்பிறப்பை போலீசார் தூக்கி தங்களின் பஞ்சாப்கட்டு டேபிளுக்கு கொண்டு போய்விட்டனர். அப்போது புகார் கொடுத்தது அதிமுக முக்கிய நிர்வாகி/ அவர் கொடுத்த புகார் மீதான நடவடிக்கையாக இன்ஸ்பெக்டர் ஒருத்தரும், ஏசிபி ஒருத்தரும் மாறிமாறி ஆடுன ஆட்டத்துல, திமுக உடன்பிறப்புக்கு பஞ்சாப்கட்டு சக்சஸா போட்டு முடிஞ்சுருச்சு. ஆபரேசன் சக்சஸ்னா பேஷண்ட் செத்துப் போறதோ நடைப்பிணமா போறதோ இதுல மட்டும்தான் பாக்கமுடியும். அப்படித்தான் இந்த பேஷண்டும் பாதி டெட் ஆகி, தேறி நடக்கவே பத்துவருஷம் ஆகிருச்சு. அந்த வழக்கு தள்ளுபடி ஆகவும் அதே பத்து வருசம் ஆயிருச்சு. இன்னாருதான் செஞ்சதுன்னு போலீசால மட்டும் குற்றத்தை நிரூபிக்கமுடியல. பஞ்சாப்கட்டு கட்டுனது கட்டுனதுதான். கைகட்டு கால்கட்டுன்னா கூட அவுத்துப் போட்டுட்டுப் போயிரலாம், இது அவிழ்க்க முடியாத கட்டு. இன்னமும் அந்த உடன்பிறப்பு நடை, ‘கிராஸ்’ போட்டு விட்டாமாதிரிதான் இருக்கும். அந்த உடன்பிறப்புமேல அன்னைக்கு புகார் கொடுத்து உள்ள தூக்கிப்போட்டு, ‘கட்டு’ போட்டு, Bend ஆக்கிவிட்ட அதிமுக நிர்வாகி இப்ப திமுகவுல key post ல …

Bend ஆவே நடக்குற அந்த உடன்பிறப்பு கடந்த நாப்பது வருசத்துல வார்டு கவுன்சிலர் கூட ஆகமுடியல – ஆகவும் விடல.

இவ்ளோதான்
அரசியல்…

ந.பா.சேதுராமன்

Exit mobile version