தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மேற்கு இணை ஆணையராக விஜயகுமார் நியமனம். விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக ஃபெரோஸ் கான் அப்துல்லா. ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக சந்தீஸ். ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை கிருஷ்ணகிரி எஸ்.பியாக மாற்றம். மதுரை எஸ்.பி சிவ பிரசாத், தேனி எஸ்.பி.யாகவும், தேனி எஸ்.பி டோங்கரே பிரவீன் ரமேஷ், மதுரை எஸ்.பியாகவும் இட மாற்றம்.
காஞ்சிபுரம் எஸ்.பி. மருத்துவர் சுதாகர் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராகவும் பரங்கிமலை காவல் துணை ஆணையராக இருந்த தீபக் விழுப்புரம் எஸ்.பி. ஆகவும், விழுப்புரம் எஸ்.பி.யாக இருந்த ஷஷாங் சாய் சென்னை கியூ பிரிவு சி.ஐ.டி. போலீஸ் எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
போலீஸ் ஐ.ஜி. ஆர். தமிழ்சந்திரன் கூடுதல் டி.ஜி.பி. யாகபதவி உயர்வு பெற்று மகளிர் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமனம்.
டி.ஐ.ஜி. வி.ஜெயஸ்ரீ, பதவி உயர்வுடன் சென்னை காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐ.ஜி.யாகவும்
டி.ஐ.ஜி.சாமுண்டிஸ்வரி, பதவி உயர்வு பெற்று சமூக நீதி (ம) மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி.யாகவும்
டி.ஐ.ஜி. எஸ்.லட்சுமி, பதவி உயர்வுடன் சென்னை ஆயுதப்படை ஐ.ஜி.யாகவும்
டி.ஐ.ஜி. எஸ்.ராஜேஸ்வரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் – செயலாளராக ஐ.ஜி. அந்தஸ்துடன் நியமனம்.
டி.ஐ.ஜி.எஸ்.ராஜேந்திரன் ஆவடி தலைமையக போக்குவரத்து கூடுதல் ஆணையராகவும்
டி.ஐ.ஜி. எஸ்.எம் முத்துசாமி, தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியின் கூடுதல் இயக்குனராக (ஐ.ஜி.) பதவி உயர்வு பெற்றார்.
டி.ஐ.ஜி. என்.எம்.மயில் வாகனன் சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி. யாகவும், எஸ்.பி.சரோஜ்குமார் தக்கூர் வேலூர் சரக டி.ஐ.ஜி.யாகவும், சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையர் மகேஸ்குமார், பதவி உயர்வில் இணை ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு எஸ்.பி. தேவராணி, சென்னை (வ) போக்குவரத்து இணை ஆணையர் பொறுப்பிலும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். எஸ்.பி.சி.ஐ.டி. எஸ்.பி. முனைவர் ஆர். திருநாவுக்கரசு பதவி உயர்வுடன் உளவுப் பிரிவு டி.ஐ.ஜி. யாகவும், போலீஸ் எஸ்.பி. ஜி.ராமர், சென்னை ரயில்வே டி.ஐ.ஜி.யாகவும் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
மேற்கண்ட பட்டியலுடன் மொத்தம் 32 பேர் பதவி உயர்வு (ம) இடமாற்ற பட்டியல் விபரம் :
சேரான்