சென்னை மத்திய புழல் சிறையில் பொங்கல் விழா பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு நடைபெற்றது.
புழல் சிறைவாசிகள் சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் விழாவை சிறப்பாக்கினர். சிறைவாசிகளின் ஆற்றலை வெளிக் கொண்டு வரும் விதமாக கவிதை எழுதுதல், கட்டுரை மற்றும் சிறுகதை படைத்தல் பேச்சுப் போட்டி போன்றவை புழல் சிறை வளாக அரங்கில் நடத்தப் பட்டன.
கிராமிய விளையாட்டுகளான உறியடி,
கயிறு இழுத்தல், போட்டிகளும் களை கட்டின. சிலம்ப விளையாட்டும், கிராமிய மணம் மாறாத நடனமும் கண்ணைக் கவரும் விதமாக அமைந்திருந்தது. புழல் சிறையில் நடைபெற்ற கிராமியக் கலை- வீர விளையாட்டு அறிவுசார் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் சீர்திருத்த பள்ளிகள் துறை போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் தலைமை தாங்கினார். பொங்கல்விழா நிறைவில்
போட்டியில் வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர்தயாள் பாராட்டினார்.
அதேபோல் சென்னை ஆவடி போலீஸ் கமிஷனர் கே.சங்கரின் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. தமிழ்நாடு போலீஸ் டிஜிபி சங்கர்ஜிவால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கயிறு இழுத்தல் போட்டி
குறைந்த வேகத்தில் சைக்கிள் ஓட்டுதல் போட்டிகள் அப்போது நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் பரிசு வழங்கி பாராட்டினார். கரகாட்டம், செண்ட மேளம், தாரை தப்பட்டை முழங்க பொங்கல் விழா நடைபெற்றது. இன்னிசை நிகழ்ச்சியோடு களை கட்டிய நிகழ்வில் போலீசாரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
P.K.M.