Madras Kural

போலீஸ் அதிகாரிகள் – காவலர்களுக்கு கமிஷனர் பாராட்டு!


சென்னை பெருநகரில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் 19 பேர் மற்றும் காவலர்கள், முதல்நிலைக்காவலர்கள், தலைமைக்காவலர்கள் ஆகியோரை நேரில் அழைத்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டி ரிவார்டு (வெகுமதி) அளித்துள்ளார். தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் இதுபோன்ற செயல்பாடுகள், போலீசாரை பெரிதும் ஊக்குவிக்கும்.

சென்னை மதுரவாயல் ஏட்டு வேலு, ஆயுதப்படை கான்ஸ்டபிள் இளங்கோவன் ஆகியோர், மதுரவாயல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேக நபர்களாய் இருவரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் வந்த டூவீலர் திருட்டு வாகனம் என தெரியவந்தது. வாகனம் மீட்கப்பட்டது. குற்றவாளிகள் காட்டுப்பாக்கம் கார்த்திக், ராணிப்பேட்டை விக்னேஷ் என்று தெரியவந்தது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புழல், புனித அந்தோணியார் கோயில் தெரு பகுதியில் வசிப்பவர் செங்கம்மாள் (78). இவர் வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டிற்குள் புகுந்த ஒருவர் செங்கம்மாளின் தங்கக்கம்மலை பறித்துக்கொண்டு ஓடிவிட்டதாக புழல் போலீசில் புகார் பதிவானது. புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் .சோபாதேவி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் செல்லதுரை, கிரேட் ஒன் காவலர்கள் ஜெயகுமார், கோபாலகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார், குற்றவாளியான சரவலான் என்பவரை 12 மணிநேரத்தில் புலனாய்வு செய்து கண்டு பிடித்து கைது செய்தனர். கம்மல் மீட்கப்பட்டது.


மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ச.சிவஆனந்த் தலைமையில் சப்.இன்ஸ்பெக்டர் என்.ராதாகிருஷ்ணன், கிரேட் ஒன் காவலர்கள் திருந்தீபன் சக்கரவர்த்தி, மிலன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், ஆலப்பாக்கம் மெயின் ரோடு பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, டூவீலரில் வந்தவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வானகரம் ஜெயதீப், தண்டையார்பேட்டை ராஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6.3 கிலோ கஞ்சா மற்றும் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்புகளில் ஈடுபட்டுவந்த ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். ஏழுசவரன் நகை 40 செல்போன்கள் மற்றும் மூன்று டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை பொன்னியம்மன் மேடு. விஷ்ணு நகரில் வசிப்பவர் கெஜலட்சுமி. வீட்டின் அருகில் குப்பை தொட்டியில், குப்பைகளை கொட்ட நடந்து சென்ற போது, டூவீலரில் வந்த நபர்கள், கெஜலட்சுமி அணிந்திருந்த 5 சவரன் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர். மாதவரம் போலீசில் இதுகுறித்து புகார் பதிவானது. மாதவரம் போலீஸ் க்ரைம் இன்ஸ்பெக்டர் காவல் ஸ்ரீஜா தலைமையில், சப் -இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஏட்டு சிவலிங்கம், கான்ஸ்டபிள் யுவராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸ் டீம் சிசிடிவி கேமரா காட்சிப்பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது, கேரளாவைச் சேர்ந்த சிபின், சென்னை பெரும்பாக்கம் சிவக்குமார் ஆகியோர்தான் என்று தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். பிடிப்பட்டவர்கள் அளித்த தகவலை அடுத்து, அரும்பாக்கம் முகமது நியாஷ், இராமநாதபுரம் செல்வகுமார், சென்னை கொடுங்கையூர் ஜமால், மாதவரம் சையது இப்ராஹிம் ஆகியோர் கூட்டாளிகள் என தெரிந்ததால் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

Na
ஒலி மாசு விழிப்புணர்வு பிரச்சாரத்தை சிறப்பான முறையில் மேற்கொண்ட செய்ண்ட் தாமஸ்மலை முதல்நிலைக்காவலர் பி. பாரதிதாசன், சென்னை போலீஸ் கமிஷனரால் பாராட்டப் பட்டார்.
சென்னை மாம்பலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இராமநாதபுரம் மாவட்டம் முகமது ரிஸ்வான், திருவல்லிக்கேணி தமீமுல் அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 414.320 கிலோ குட்காவும், ரூ.63,540/- ரொக்கப்பணமும், கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தி.நகர் போலீஸ் துணை கமிஷனரின் தனிப்படையைச் சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ், ஏட்டு ஜெ.முரளி, கிரேட் ஒன் காவலர் தாமேஸ்வர் நடத்திய சோதனையில் மேற்கண்ட நபர்கள் பிடிபட்டனர். தனிப்படை டீமை போலீஸ் கமிஷனர் பாராட்டி வெகுமதி வழங்கினார். ந.பா.சேதுராமன்

Exit mobile version