Madras Kural

10.5% இட ஒதுக்கீடும்-சாதி வாரி கணக்கெடுப்பும்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசு உடனடியாக 10 .5 சதவீத இட ஒதுக்கீடும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பன் சத்திரத்தில் வடக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் வி.எம். பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக சமூக நீதி பேரவை மாநில தலைவரும், வழக்கறிஞருமான கே. பாலு கலந்து கொண்டு புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நியமனச் சான்று வழங்கி கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

முக்கிய தீர்மானங்கள் : ஆரணி, கொசத்தலை ஆறுகளில் இருந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் 15 முதல் 20 டிஎம்சி தண்ணீர் வரை வீணாகச் சென்று கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் இரண்டு ஆறுகளிலும் 5‌ கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை, 100 அடிக்கு ஒரு போர்வெல் அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை மத்திய -மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

சிட்கோ தொழில் பூங்கா வளாகம் அமைக்க ‌ விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப் படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம், நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு கிளையிலும் சாவடி வாரியாக பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணி ஆற்றுவது, தமிழக அரசு வன்னியர்களுக்கான 10. 5 சதவீத இட ஒதுக்கீடு உடனே நிறைவேற்றவும், பீகார் போன்று‌ ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட. வலியுறுத்தியும் பல்வேறு தீர்மானங்கள் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் நகர மன்றத்தலைவர் அம்பத்தூர் கே.என்.சேகர், மாவட்டத் தலைவர் எஸ்.வி. ரவி, இளைஞரணி மாவட்ட செயலாளர் சுதாகர், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் துரை ஜெயவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

P.K.M

Exit mobile version