திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வி. எம். பிரகாஷ் பேசும்போது,
“பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிரதமர் மோடியுடன் கைகோர்த்த போதே தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றிக் கூட்டணி என்பது உறுதியாகி விட்டது” என்றார்.
திருவள்ளூர் தனி தொகுதி பாஜக வேட்பாளர் பொன். பால கணபதி பேசுகையில், “திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் விவசாய வளம், கடல் வளம், தொழில் வளம் ஆகிய மூன்றும் இருந்தும் இங்குள்ள பூர்வ குடிமக்கள் வேலை வாய்ப்பு இன்றி இருப்பதாகவும், ஏற்கனவே இத்தொகுதியில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை என்பதை அறிந்து தான் பிரதமர் மோடி தன்னை திருவள்ளுவர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவித்துள்ளதாகவும் தான் வெற்றி பெற்றால் தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என்றும் குறிப்பிட்டு பேசினார்.
பாமக மாவட்ட தலைவர் எஸ்.வி. ரவி, இளைஞரணி செயலாளர் சுதாகர், சமூக நீதிப் பேரவை செயலாளர் வழக்கறிஞர் மாசிலாமணி, பாஜக முக்கிய நிர்வாகிகளான ஆனந்த பிரியா, லோகநாதன், செந்தில்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
P.K.M