சென்னை திருவெற்றியூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 138 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மீட்கப் பட்டது. ஒருவர் கைது செய்யப் பட்டார்.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு காவல்பணிகள் மேற் கொள்ளப் படுகிறது. அந்த வகையில், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம்; போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீஸ் டீம், சென்னையில் தீவிரமாய் கண்காணித்து வந்தது.
அதன் தொடர்ச்சியாக, திருவெற்றியூர் போலீஸ் டீமிடம், திருவெற்றியூர் விம்கோநகர் செக்போஸ்ட் அருகில் பைக்கில் வந்த எர்ணாவூர் சிவலிங்க பெருமாள் வாகன தணிக்கையில் குட்கா பொருட்களோடு சிக்கினார்.
விசாரணையில், எண்ணூரில் குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து அங்குள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். சிவலிங்க பெருமாள் கொடுத்த தகவலையடுத்து 138 கிலோ எடையுள்ள குட்கா- புகையிலை பாக்கெட்டுகள் கைப்பற்றப் பட்டது. இரண்டு செல்போன்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சிவலிங்க பெருமாள் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார்.
சே