ஆந்திர மாநில முதலமைச்சராகவும், தெலுங்குப் படவுலகின் சூப்பர் ஸ்டாராகவும் இருந்தவர் மறைந்த என்.டி.ராமராவ். என்.டி.ஆரின் 12ஆவது மகள் உமா மகேஸ்வரி. ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸில் வசித்து வந்தார்.
இன்று பிற்பகல், வீட்டிலிருந்த மின்விசிறியில் உமாமகேஸ்வரி தூக்கில் தொங்கியபடி சடலமாக போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், உடல்நலக்குறைவு காரணமாக பல மாதங்களாக உமாமகேஸ்வரி சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. மன அழுத்தம் காரணமாக உமமகேஸ்வரி, இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை போய் இருக்கிறது.
ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர ரெட்டி, ‘இது தற்கொலைதான். முழுமையான விசாரணைக்குப் பின்னரே தற்கொலைக்கான காரணத்தை சொல்லமுடியும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடுவும் இறந்துபோன உமா மகேஸ்வரிக்கு நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-சேரான்