Madras Kural

தளபதி விஜய் டயலாக் பேசிய திமுக பட்டாக் கத்திக்கு வலை!

பட்டாக்கத்தியை கையில் பிடித்தபடி, “தப்பு நடக்கணும், ஆனா அத நாங்க மட்டும் தான் செய்யணும்” என்று சினிமா டயலாக் பேசி வீடியோ வெளியிட்டு ‘கெத்து’ காட்டிய மூன்று வெத்துக்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆளுங்கட்சி அடையாளத்துடன் சுற்றும் ஒருவர் மட்டும் இதில் சிக்கவில்லை, அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், காயலார் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் திமுக பிரமுகரான மைக்கேல். இவருடன் சேர்த்து மொத்தம் நால்வர், சோஷியல் மீடியா கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சோஷியல் மீடியா கூட்டாளிகளே திடீரென சோஷியல் மீடியாவில் பரபரப்பை பற்ற வைத்து விட்டு அதில் சிக்கியும் விட்டார்கள்…

“தப்பு நடக்கணும் ஆனா அத நாங்க மட்டும் தான் செய்யணும்” என்ற சினி வசனத்தை பேசியபடி, யாரையோ எச்சரித்து மிரட்டும் தோரணையில் பட்டாக்கத்தியை எடுத்து சுழற்றிக் காட்டும் காட்சி அதில் உள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் வெளியான இந்த காணொளி காட்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தது. அடுத்தகட்டமாக கும்மிடிப்பூண்டி போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நால்வர் குழுவில் தன்ராஜ், விஜய், யுவராஜ் ஆகிய மூவரை பிடித்து கைது செய்தனர். வழக்கம் போல, நாலாவது நபரான மைக்கேல், ஆளுங்கட்சி அடையாளம் என்பதால் தலைமறைவு லிஸ்ட்டில் இருக்கிறார்.

சேரான்-

https://madraskural.com/wp-content/uploads/2023/08/VID-20230818-WA00052.mp4
Exit mobile version