சென்னை மயிலாப்பூர், டுமீங்குப்பம் புதிய குடியிருப்பு, முதல்மாடியில் வசித்த பிரசன்னா(38)வை கடந்த 24ஆம் தேதி தூக்கத்திலேயே கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றிருந்தனர். கொலை பிரசன்னாவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், பிரசன்னாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த டோமினிக் என்பவரின் மனைவிக்கும் பழக்கம் இருந்தது தெரிந்த டோமினிக், கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரசன்னாவை கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது.
போலீசாரின் தீவிர தேடலில் பிரசன்னா கொலை தொடர்பாக மயிலாப்பூர் சீனிவாசன் (42) கடந்த 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டு செல்போன், பைக் பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அடுத்த கட்டமாக அயனாவரம் முருகேசன் (35) மயிலாப்பூர் லூர்துசாமி (64) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு ஒரு ஆட்டோ மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கின் முக்கிய குற்றவாளியான டோமினிக் உட்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சே