Madras Kural

மாமியாரின் காதலனை கொலை செய்த மருமகன் !

மாமியாருடன் கள்ள உறவில் இருந்த காதலனை, கத்தியால் குத்தி மருமகன் கொலை செய்துள்ள சம்பவம், சென்னை அருகே நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூச்சி அத்திப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். ஓய்வு பெற்ற பால்பண்ணை ஊழியர். இவருக்கும் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று அந்தப்பெண் தனது வீட்டின் முன்பாக மகள் தீபிகா, மருமகன் மணிகண்டன் ஆகியோருடன் இளநீர் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்குவந்த முத்துக்கிருஷ்ணன், கள்ள உறவில் இருந்த அந்தப் பெண்ணிடம் ஏதோ பேசியுள்ளார்.

பொது இடத்தில் மாமியாரிடம் பேசியதால் ஆத்திரமடைந்த மருமகன் மணிகண்டன், முத்துக்கிருஷ்ணனை கண்டித்ததால் அங்கே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது இளநீர் கடையில் இருந்த கத்தியால் முத்துகிருஷ்ணன் தலையில் சரமாரியாக மணிகண்டன் வெட்டித் தள்ள, முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலின் பேரில் சோழவரம் போலீசார், முத்துக்கிருஷ்ணன் உடலை, பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்கோ.முத்து

Exit mobile version