Madras Kural

வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடர்கள் : 14பைக் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வேகமாக வரவே அவனை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் முன்பின் முரணான தகவல்களை சிறுவன் தெரிவிக்கவே போலீசார், ஆவணங்களை சோதிக்க, எல்லாமே போலி என தெரியவந்தது. விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளாக திருடி கள்ளச் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் கும்பலில் அவனும் ஒருவன் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது. சிறுவன் அளித்த தகவலில் பண்ருட்டியைச் சேர்ந்த அன்பு (25) என்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். சந்தேகம் எழாமலிருக்க சிறுவனை உடன் சேர்த்துக்கொண்டு பைக்குகளை திருடி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில், கொண்டுபோய் அன்பு விற்பனை செய்ததும், வரும் பணத்தை இருவரும் பங்கிட்டு கொண்டு செலவு செய்து வந்ததும் தெரியவந்தது.

சொகுசான வாழ்க்கை வாழ சொகுசு பைக் திருட்டில் ஈடுபட்டதாக இருவரும் விசாரிப்பில் தெரிவித்துள்ளனர். ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான 14 மோட்டார் சைக்கிள்களை போலீசார் அவர்களிடமிருந்து கைப்பற்றினர். விசாரணைக்கு பின்னர், போலீசார் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் அன்புவை ஆஜர் படுத்தி சென்னை மத்திய புழல் சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளில் ஒரு நபர் சிறுவன் என்பதால் அவனை சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

நம்பி

Exit mobile version