Madras Kural

குடிநீர் வாரியம் முக்கிய தகவல்!

திருவள்ளூர் மாவட்ட மீஞ்சூர் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்துள்ளதாக,
குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையை அடுத்த மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீருக்காக சுத்திகரிக்கும் திறன் கொண்டது இந்த சுத்திகரிப்பு ஆலை.

இந்நிலையில் ஆலையின் பிரதான இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 26.01.2024 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு சுத்திகரிப்பு நிலையம் செயல்படாது என்பதால் அந்த இரண்டு நாள்களும் சுத்திகரிப்பு ஆலை மூடப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு மாற்று ஏற்பாடாக மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி உள்ளிட்ட சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு புழல் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தேவையான குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளும்படியும் குடிநீர்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அவசர தேவைகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து லாரிகள் மூலமும் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம். இதேபோன்று குடிநீர் இணைப்பு இல்லாத இடங்கள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் வாயிலாகவும் தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

பொன்.கோ.முத்து

Exit mobile version