Madras Kural

பத்திரிகையாளர் சங்கத்தலைவர் முனைவர்.குமார்! HBD வாழ்த்துகள்…

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முனைவர் திரு.க.குமார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். நமது ‘மெட்ராஸ்குரல்’ இணையதளம் சார்பில் அவரது சேவையும் அவரும் சிறப்பாய் மிளிர வாழ்த்துகிறோம். சென்னை நுங்கம்பாக்கம் மீடியா கிளப் சேம்பர் அலுவலகத்தில் இன்றுமாலை ஊடக நண்பர்களின் வாழ்த்துகளை பெறும் திரு. க.குமார் அவர்களை அவரது சங்க நிர்வாகிகள் வாழ்த்தளித்த பாராட்டு பாமலரை இங்கே பதிவு செய்கிறோம்.

பத்திரிகைபத்திரிகையாளர்களின் போராளி; பண்பாளர்; அனைவருக்கும் அன்பர்; நண்பர்; பத்திரிகையாளர்; முனைவர் க.குமார்.

திரு. க.குமார் அவர்களின் 25 ஆண்டுகால பத்திரிகை துறையின் பயணத்தை 25 நிமிடம் கூட சொல்லலாம்- ஆனால் ஐந்து நிமிடத்திற்குள் சுருக்கியிருக்கிறோம்.

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக அங்கம் வகிக்கும் திரு. குமார், பத்திரிகைகளில் பணியாற்றும் பொழுதே பத்திரிகையாளர்கள் உரிமை பாதுகாக்கப்பட வேண்டியும், பத்திரிகையாளர் நலனுக்கு தமிழ்நாட்டில் நல வாரியம் அமைக்கப்பட வேண்டிய கோரிக்கையையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். பத்திரிகையாளர் பாதுகாப்புக்காக
தனி சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசை வலியுறுத்தி குரல் கொடுத்தவர்.
ஊடக உலகத்தவர் உரிமைக்காக
அடுத்தடுத்த
கோரிக்கை மனுக்களை மத்திய மாநில
அரசுகளின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றவர்.
அவற்றை நிறைவேற்றி முடிக்கும் வரை ஓயாது போராடியவர் – நின்றவர்
வென்றவர்
முனைவர்
நம் தலைவர்
க.குமார்!

தலைமைப் பொறுப்பை தாமே ஏற்றுக்கொண்டு
தனக்குத்தானே
கிரீடம் சூடிக்கொண்டு
நானேதான்
தலைமை என்று
சொல்லிக்கொண்டு
திரிவோர் பலர்!
இந்த சங்கமும்
இந்த கிரீடமும்
முனைவர் திரு.குமார்
தோள்களிலும்
தலையிலும்
நாங்கள்
ஏற்றி வைத்தது!

ஊடக உரிமையை
ஊடகத்தோர் நலனை
அந்த வகையில்
தாங்கிப் பிடித்தும்
தோளில்
தூக்கி வைத்தும்
பாரம் சுமக்கும்
சுமைதாங்கியை
எத்தனை எத்தனை
பாராட்டினாலும்
அது அளவில் குறைவே!

அடடா…
தலைமைச்செயலக
அனைத்துப் பத்திரிகையாளர்
சங்கமா?
பெயரும் சிறப்பு.
சங்கத்தின்
தலைமையும் சிறப்பு.
ஏனைய நிர்வாகிகள்
உறுப்பினர்கள் என
அத்தனை பெயர்களுமே
சிறப்பாய் உள்ளதே…

விடலாமா இதை?

தலைமைச் செயலகம்
என்றொரு
பின்னிணைப்போடு
சங்கத்தின் பெயர்
கூடாது என்று
நீதிமன்றத்தில்
பிராது கொடுத்தது
ஒரு கும்பல்!
தேகம் என்றிருந்தால்
சொரி
சிரங்கு
அரிப்பு
ஐந்தாம்படை
அனைத்தும் இருக்குமே.
இப்படி ஒன்றல்ல
நம்மீது போடப்பட்ட
பொறாமை வழக்குகள்
ஏராளம் ஏராளம்…
அத்தனையும்
இப்போது காணோம்.

ஊடகஉலகில்
செய்தி சேகரிப்பும்
அந்தத் தொடர்பின் மூலம்
பொதுமக்கள்
நலன் மீட்பும்தான்
இந்தத்துறையின்
அழகு.

அஃதே
கல்விக்கு
நாம் செலுத்தும்
நன்றிக்கடன்.
அதைத்தான்
நம் தலைமை
நம் தலைவன்
நம் நண்பன்
நம் சகோதரன்
முனைவர்
க.குமார் செய்கிறார்!

திரு.குமார்
போட்டு வைத்திருக்கும்
அன்புப்பாதையை
பிடித்தோர் அதன்மீது
பயணம் செய்கின்றனர்
நம்மைப்போன்றே…

நம் சங்கத் தலைமை
திரு. தலைவருக்கு “பத்திரிகையாளர்களின் போராளி, தலைமைச் செயலக குமார்” – என்பது
நின்று
நிலைத்து விட்ட
அடையாளப் பெயர்! இது
வெறும் பெயர் அல்ல.
செய்து முடித்த
பணிகளுக்கு
கிடைத்த
பாராட்டு மாலை.
தாமிரப் பட்டயம்.
பொற்கிழி என்போம்.

எளிய மனிதரின்
பிறந்தநாளில்
நமது
தலைமைச் செய்தி ‘youtube டிஜிட்டல்’
தொடக்கம் பெறுவதில்
அனைவரும் மகிழ்கிறோம்.
பெருமை கொள்கிறோம்.
சங்கம் போன்றே
யூடியூபும் செழிக்க
சிறப்பாய் ஆதரித்து
உறுதியாய்
துணைநிற்போம்…

இங்ஙனம் :
எந்நாளும்
துணை நிற்கும்
நாங்கள்
நீங்கள்…

05.07.2023

Exit mobile version