Madras Kural

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தேர்தல்|வெற்றி அணி முழுவிபரம்|

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று காலை (15.12.2024) தேர்தல் நடைபெற்று இரவே முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவி (அணிகளாக நின்றோர்) வேட்பாளர்கள் சுரேஷ் வேதநாயகம் – 659 வாக்குகள் (வெற்றி) ராதாகிருஷ்ணன் (ஆர்.கே.)- 398 வாக்குகள், V.M. சுப்பையா – 103 வாக்குகள் பெற்றனர்.

மணிகுமார் -61 வாக்குகள் (தனி), ஜெயபாதுரி – 43 வாக்குகள் (தனி), துரை ராமச்சந்திரன் – 32 வாக்குகள் (தனி), ஆந்தை V. குமார் – 26 வாக்குகள் (தனி), G.கதிர்வேல் – 22 வாக்குகள் (தனி), து. ரமேஷ் -15 வாக்குகள் (தனி) பெற்றனர்.


அணியின் தலைவர் சுரேஷ் வேதநாயகம், பொதுச்செயலாளர் அசீப், பொருளாளர் மணிகண்டன், துணைத் தலைவர்கள் மதன், சுந்தரபாரதி, இணைச்செயலாளர் நெல்சன்சேவியர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி.ஸ்டாலின்,அகிலா ஈஸ்வரன், பழனிவேல், ராஜகோபால் என பெரும்பான்மை பலத்துடன் அணி வெற்றி பெற்றது. நிர்வாகக் குழு உறுப்பினராக கவாஸ்கர் மட்டும் வேறு அணி போட்டியாளர்களில் ஒருவராக வெற்றி பெற்றுள்ளார்.

நீதிக்கான கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் 659 வாக்குகள் பெற்று 261 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. அதேபோல் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட அசீப் 734 வாக்குகள் பெற்று வெற்றி.

ணைச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட நெல்சன் 697 வாக்குகள் பெற்று வெற்றி. பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட மணிகண்டன் 803 வாக்குகள் பெற்று வெற்றி.

துணைத்தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட சுந்தர பாரதி 516 வாக்குகள் பெற்று வெற்றி. மதன் 599 வாக்குகள் பெற்று வெற்றி. நிர்வாகக் குழு உறுப்பினர் வேட்பாளர்களில் மேலே நாம் குறிப்பிட்ட வரிசை முறைப்படி ‘நீதிக்கான கூட்டணி’ யின் நான்கு வேட்பாளர்களும் ஒற்றுமை அணியின் ஒரு வேட்பாளரும் (கவாஸ்கர்) வெற்றி பெற்றுள்ளார்கள். கவாஸ்கர் (584 – ஒற்றுமை அணி) ஸ்டாலின் (634), பழனிவேல்(596),அகிலா ஈஸ்வரன் (602), விஜய கோபால்(509 ) ஆகியோர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஒற்றுமை அணியின் வெற்றிக்காக தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ஏ.ஜெ.சகாயராஜ், நக்கீரனின் தாமோதரன் பிரகாஷ் ஆகியோர் நேரடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கான தேர்தலை நடத்தக் கோரி மாற்றத்துக்கான ஊடகவியலாளர் சங்கத்தின் நிர்வாகிகள், அமரர் திரு எம்யுஜெ மோகன், ஐகோர்ட் வி.எம். சுப்பையா, தாமோதரன் பிரகாஷ் உள்ளிட்ட எண்ணற்றோர் ஆண்டுக் கணக்கில் போராடியதும் வழக்கு தொடுத்ததும் இங்கே நினைவுகூர வேண்டிய ஒன்று. அப்படி போராடிய தோழர்களில் ஒருவரான ஜெயபாதுரி, தனி வேட்பாளராக தலைவர் பதவிக்கு போட்டியிட்டது இன்னொரு வியப்பு. மூத்த பத்திரிகையாளர்களான து.ரமேஷ், ஆந்தை வி.குமார், துரை. ராமச்சந்திரன், எம்ஜிஆர் டி.வி ஹமீது போன்றோர் தனி வேட்பாளர்களாக களத்தில் நின்றது இன்னொரு வியப்பு.

போட்டிக்களத்தில் மொத்தம் 44 வேட்பாளர்கள் இருந்தனர். பிரிந்து போன குடும்ப உறவுகள் மொத்தமும் 1502 என்றிருக்க அதில் 1371 உறவுகள் வாக்களிக்க வந்தது கண்கொள்ளா காட்சி. ஆயிரம் கருத்து முரண்பாடு கொண்டோரும் ஒருமித்த கருத்தோரும் ஒரே அணியிலும் வெவ்வேறு அணியிலும் கைகோத்து வாக்கு சேகரித்தது சிறப்பாக இருந்தது. பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்சாப்குழுவை அமைத்து உற்சாகப்படுத்திய ஐகோர்ட் வி.எம். சுப்பையா, பி.டி.சரவணபாரதி, ஸ்பைடர்மேன் சூளை சீனுவாசன் மற்றும் லலித் ஜூட், விஸ்வா விஸ்வநாத் களத்தில் அனைவரையும் உற்சாகப் படுத்தியபடி வளையவந்த தலைவர் வேட்பாளரும் சீனியர் ஜர்னலிஸ்ட்டுமான துரைக்கண்ணு ரமேஷ், அண்ணன்கள் எம்.பி. உதயசூரியன், ராஜ்மோகன், மோ.ஜேம்ஸ், முத்துக் கிருஷ்ணன், மோகனரூபன், மற்றும் சகோதரர்கள் தமிழா தமிழா பாண்டியன், பிரவீன் பிலிப், கடற்கரய், ‘விஜய் டிவி’ மதிவாணன், மிதார், ‘புதியவன்’ சையது கனி போன்றோருக்கு அன்பு முத்தங்கள்.

ந.பா.சேதுராமன்

Exit mobile version