Madras Kural

மதுரை டூ போடி – கிளம்பியது ரயில்… மக்கள் மகிழ்ச்சி!

மக்களை மகிழவைத்த ரயில்

மதுரை – போடி (தேனி)க்கு இடையேயான ரயில் பயணம் 11 ஆண்டுகளுக்கு பின் (90.4 கிலோ மீட்டர்) தொடங்கியது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி 2011-ல் தொடங்கியிருந்தாலும் அது, 2022- ல் தான் முடிவுக்கு வந்திருக்கிறது.

முதற் கட்டமாக மதுரை – உசிலம்பட்டி, இரண்டாம் கட்டமாக உசிலம்பட்டி – ஆண்டிபட்டி மூன்றாம் கட்டமாக ஆண்டிபட்டி – தேனி என படிப்படியாக பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. நான்காம் கட்டமாக தேனி போடி – இடையே பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில்தான் மதுரை – தேனி இடையே முன்பதிவு இல்லாத தினசரி சிறப்பு ரயில் மே 27-ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. முன்னதாக பிரதமர் மோடி, ரயில் பயணத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்த நிலையில் மே 27-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணிக்கு தொடங்கியது, ரயில் பயணமும் மக்களின் மகிழ்ச்சியும்… விகடகவி எஸ். கந்தசாமி

Exit mobile version