Madras Kural

மின்சாரம் தாக்கி சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 4பேர் படுகாயம்…

சென்னை மணலி புதுநகரில் பேருந்து நிறுத்த நிழல் குடையை வேறு இடத்தில் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது உயர் அழுத்த மின் கம்பியில் கிரேன் உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் நான்கு பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மணலி புது நகரில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவில் அருகே ஏற்கனவே இருந்த பேருந்து நிறுத்த நிழல் குடையை எவ்வித காரணமும் இன்றி கடந்த வாரம் மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றி அமைத்தனர். பின்னர் அதே நிழற்குடையை இன்று ஏற்கனவே இருந்த இடத்தில் அமைப்பதற்காக கிரேன் உதவியுடன் தூக்கி வந்த போது நிழற்குடை ஆடாமல் இருக்கக மாநகராட்சி ஊழியர்கள் தினேஷ்(24) சேகர்(39) கிருஷ்ணன்(50) நாகராஜ்(40) ஆகியோர் அதன் இரும்பு கால்களை பிடித்தவாறு வந்தனர். அப்போது, கிரேன் மேலே சென்று கொண்டிருந்த உயரழுத்த மின் கம்பி உரசியதில் நிழற்குடையில் பாய்ந்த மின்சாரம், அதனை தாங்கி பிடித்துக் வந்த ஊழியர்கள் மீதும் பாயவே, தூக்கி வீசப்பட்ட நான்கு பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக மணலி புதுநகர் காவல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்.கோ.முத்து

Exit mobile version