சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம் மண்டல அலுவலகம் 3-ல் செயல்பட்டு வரும், மண்டல வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பண பரிமாற்ற முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் 15 பேர் அடங்கிய அதிகாரிகள் நேற்றுமாலை அதிரடி சோதனை நடத்தினர்.
இன்று காலை 5 மணி வரை (11 மணி நேரம்) நடைபெற்ற சோதனையில், முக்கிய ஆவணங்கள்- கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய் பணம் ஆகியன பறிமுதல் செய்யப் பட்டது. இது தொடர்பாக மண்டல அலுவலக வருவாய் அலுவலர் சூர்யா உள்ளிட்ட அதிகாரிகளிடம் கெடுபிடி விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகராட்சி மண்டல அலுவலகத்தில். லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய இந்த அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்வா அ