Madras Kural

குடிநீர் தட்டுப்பாட்டில் சென்னை மதுரவாயல்…

சென்னை மாநகராட்சி மண்டலம் 11, வார்டு 144 –ல் கடந்த 20 நாட்களாக வீடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் மெட்ரோ வாட்டர் சப்ளை பாதிக்கப்பட்டு உள்ளது. குடிநீர்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து கூறும்போது, “கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரை மின்சார கேபிள் பதிப்பதற்காக சாலை ஓரம் பள்ளம் தோண்டும்போது குடிநீர் குழாய் உடைக்கப்பட்டதால் அபிராமிநகர் பகுதியில் 20 நாட்களாக மெட்ரோவாட்டர் சப்ளை பாதிக்கப் பட்டிருக்கிறது” என்றனர். உடைந்த குழாயை சரி செய்வது யார் ? குடிநீர் வாரியமா அல்லது மின் வாரியத்தில் கேபிள் பதிக்கும் புராஜக்ட் திட்டமா என்ற பிரச்சனையில் இரண்டு வாரத்திற்கும் மேலாக அபிராமிநகர் பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகி நிற்கின்றனர். உடைந்த குழாய் சரி செய்யப்பட்டு வீடுகளுக்கு மெட்ரோவாட்டர் சப்ளை எப்போது, உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்துவார்களா என்பதே பொதுமக்கள் கேள்வியாக உள்ளது.

ஸ்ரீனிவாசன்

Exit mobile version