
இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்டல் சிலைகளை வடித்து, சென்னையில் அதற்கான கண்காட்சி ஒன்றையும் தொடங்கியுள்ளார், செல்வகுமார் தயாளன். சென்னை அரசு சிற்பக் கலைக்கல்லூரியின் (BFA -1999–2003) மாணவர். சென்னை லலித்கலா அகாடமியில் மார்ச் 28, 2026- வரை கண்காட்சி நடக்கிறது. மொத்தம் பத்து சிலைகள். இந்தியாவில் இப்படியான வகைமையில் (Method) சிற்பம் வடிப்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள். பால்ய நண்பன், மூர்த்தி ஆர்ட்ஸ் ஆர்.கே. மூர்த்தி வாயிலாக தகவலைப் பெற்றதும் செல்வகுமார் தயாளனிடம் பேசினேன்.
“மொத்தம் பத்து சிலைகள். காட்டன் ஸ்டீல் மற்றும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மெட்டல்களின் துணையோடு இந்த சிலைகளை வடிவமைப்பு செய்துள்ளேன். இந்தியாவில் இப்படி மெட்டல்களின் மூலம் சிலை வடிப்பது இதுவே முதல் முறை”
*சிலை முழுமையாக எவ்வளவு நாள்கள் பிடிக்கிறது?*
“ஓய்வின்றி வடிவமைப்பை மேற் கொண்டால், ஒரு சிலையை செய்து முடிக்க 55 நாள்கள் ஆகும். சற்றே ஓய்வெடுத்து செய்வதாக இருந்தால்; இன்னும் 55 நாள்கள் கூடுதலாக தேவைப்படும்.”
*ஒரு சிலையை செய்து முடிக்க எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது?*
“காட்டன் ஸ்டீல், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் துணையுடன் உருவாகும் சிலைகள் என்பதால்; நிறையவே பணம் தேவைப்படும். போதுமான Sponsors எதுவும் கிடைக்கவில்லை. Sponsors கிடைத்தால் இன்னும் பலநூறு சிலைகளை செய்து விடுவேன். உலகளவில் இதுபோன்ற கலைநுட்ப முயற்சிகளுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. நம் நாட்டில் அந்த வரவேற்பும், அரவணைப்பும் முழுமையாக கிடைத்தால் அதுவே போதுமானது. சென்னையில் நடந்து கொண்டிருக்கும் இந்த கண்காட்சிக்கு ஊடக வெளிச்சம் கிடைத்தால் நன்றாக இருக்கும்”…
*உங்களின் உழைப்புக்கும், ஆர்வத்துக்கும் வாழ்த்துகள். உங்களிடம் பொதிந்திருக்கும் கலை, உலகளவில் உச்சம் தொட மீண்டும் வாழ்த்துகள். உங்களைப் போன்ற கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம், நாட்டையும் உலகளவில் பெருமைப்படுத்த முடியும். அதை செய்யவேண்டிய இடத்தில் மத்திய- மாநில அரசுகள் உள்ளன. *
ந.பா.சேதுராமன்