Madras Kural

சிந்துமுதல் பொருநை வரை-சென்னையில் கருத்தரங்கம்!

நாள்: 04.01.2024 – நேரம்: காலை 10 மணி
இடம்: மாநிலக் கல்லூரி, சென்னை.
“சிந்து முதல் பொருநை வரை” தொடர் கருத்தரங்கத் தொடக்க நிகழ்வு.
பேராசிரியர் அ. கருணானந்தன், தொல்லியல் ஆய்வறிஞர் ஆர்.பாலகிருஷாணன் (ஐஏஎஸ் பணி நிறைவு), கீழடி தொல்லியல் ஆராய்ச்சியாளர் முனைவர் அமர்நாத் இராமகிருஷ்ணா உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

உலகம் முழுக்க தொல்லியல் ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் மூலம் மனிதகுல வரலாறு அறிவியல் அணுகு முறையில் எழுதப்படுகிறது. கடந்தகால நிகழ்வுகள்தான் எதிர்கால சவால்களை கணிக்க உதவும். வரலாறு இல்லாத இனம் அழியும். சமீப காலமாக இந்திய வரலாற்றுத் துறை மிகப் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. மக்களின் உணர்வுகளை தூண்டி, பல்வேறு குழப்பம் நிறைந்த ஆய்வுக் கட்டுரைகள் மூலம், உண்மையை மறைத்து பொய்யை வரலாறாக பதிய வைக்கும் முயற்சிகள் நடந்துவருகிறது.

இதன் விளைவாக இந்தியாவின் பூர்வகுடிகளின் மெய்யான வரலாறு மறைக்கப்பட்டு, பன்முகத் தன்மையை சிதைத்து ஒற்றை பண்பாட்டை இந்திய பண்பாடாக நிறுவும் சூழ்ச்சி அறிவியல் தொழில்நுட்பம் கொண்டே அரங்கேறி வருகிறது. வரலாறு இத்தகைய சோதனைக்கு உள்ளாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மக்களின் வாழ்வில் முறைக்கு வரலாறு உண்டு. இந்திய மக்களின் உண்மையான வரலாற்றை அடுத்த தலைமுறை வரலாற்று ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கு விளக்கி சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்து; தொல்லியல் அறிஞர்கள், வரலாற்று பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பங்கேற்கும் தொடர் கருத்தரங்குகள் இந்தியா முழுக்க நடக்க உள்ளது.

அதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நான்கு மண்டல கருத்தரங்கங்கள் சென்னை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் நடக்க உள்ளது.

தொடக்கக் கருத்தரங்கம் வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாநிலக் கல்லூரியில் வருகின்ற 2024 ஜனவரி 4 (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் நிகழ்வாக மாநிலக் கல்லூரி வரலாற்றுத் துறையுடன் இணைந்து வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் நடத்த உள்ளது.

காலை 10 மணிக்கு மாநிலக் கல்லூரியில் நடைபெறும் தொடக்க அமர்வில் மாநிலக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் க. துரைச்சாமி தலைமையில், மாநிலக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் இரா. இராமன் அவர்கள் தொடங்கி வைக்க, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ். எஸ். சுந்தரம் அவர்களின் வாழ்த்துரையுடன் பேராசிரியர் அ. கருணானந்தன், தொல்லியல் ஆய்வறிஞர் ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் பணி நிறைவு, இந்திய தொல்லியல் ஆய்வகம் (ASI) கீழடி தொல்லியல் ஆராய்ச்சியாளர் முனைவர் கி. அமர்நாத் இராமகிருஷ்ணா உள்ளிட்டவர்கள் தங்களின் ஆய்வுரைகளை வழங்க உள்ளனர்.

உண்மையை உரக்கப் பேசும் ஊடகத்தின் செய்தியாளர்கள் தங்களின் பல்வேறு பணிகளுக்கு இடையில் வரலாறு காக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து 04.01.2024 அன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கிற்கு வருகை தந்து செய்திகளை சேகரித்து மக்களிடம் கொண்டு சேர்த்திட வேண்டுகிறோம்.

செய்தி நிறுவனங்கள் தங்களின் செய்தியாளர் மற்றும் புகைப்பட நிருபரை கருத்தரங்கிற்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறோம். மேற் கொண்டு தகவல்கள் வேண்டுவோர் வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்களை 9003202814 என்ற‌ எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
(மின்னஞ்சல் karunanandana@gmail.com)

நன்றி, வணக்கம்.

வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் சார்பாக. பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலாளர்,
பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை)

சேரான்

Exit mobile version