சென்னையை அடுத்த கேளம்பாக்கம் ஜோதிநகரில், திருநெல்வேலியில் இயங்கிவரும் எபிகோர் தொண்டு நிறுவனம் சார்பில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட 350 குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் 9-வதுவார்டு ஜோதிநகர் பகுதியில் திருநெல்வேலி வள்ளியூரில் இயங்கிவரும் எபிகோர் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளிகள் (ம) ஆதரவற்றோர்களை உள்ளடக்கிய, 350 குடும்பங்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் நிவாரணநிதியாக ரூ. 2,000 பரிமாற்றம் செய்வதற்கான பணிகளின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் எபிகோர் தொண்டு நிறுவனத்தின் களப்பணி அலுவலர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார் . கணக்காளர் செல்வகுமார் வரவேற்பில் சிறப்பு அழைப்பாளராக கேளம்பாக்கம் ஜோதிநகர் திமுக கிளை மகளிரணிச் செயலாளர் கே.ஏ.டி. தனக்கோட்டி அன்பு- கே.ஏ.டி டிரான்ஸ்போர்ட் அதிபரும், சமூக சேவகருமான கே.ஏ.டி. அன்பு, மருத்துவர் பாக்கியராஜ் பங்கேற்றனர்.
எபிகோர் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘வாஷிங் கிட்’ டை பயனாளிகளுக்கு வழங்கி மிக்ஜாம் புயல்நிவாரண நிதியாக ரூ.2000- தொகையை வங்கியில் செலுத்தும் பணியினை துவங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.
கேளம்பாக்கம்,திருப்போரூர்,கோவளம், கீரப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ஆதரவற்றோர் இதில் பயன்பெற்றனர். நிதியுதவி மூலம் பயன்பெற்ற மக்கள் கூறும் போது, “மிக்ஜாம் புயலால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் எங்களுக்காக நிதிவழங்கிய எபிக்கோர் தொண்டு நிறுவனத்திற்கும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொடுத்த மக்கள் சேவகர் கே.ஏ.டி. தனக்கோட்டி அன்பு அவர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்.
பிரீத்தி எஸ்