Madras Kural

முதல்வரை உருவாக்கிய முதல்வரின் HBD-99 திமுகவினர் கொண்டாட்டம்!

முத்தமிழறிஞர் -டாக்டர் கலைஞர் என்று திமுகவினரால் கொண்டாடப்படும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளை (ஜூன் -3) முன்னிட்டு சிறப்பான கொண்டாட்ட ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர். கருணாநிதியின் நினைவுத் தடம் பதியப்பட்ட இடங்கள் அத்தனையும் அலங்காரமும் வண்ணமயமுமாய் ஜூன் -3 பிறப்பதற்கு சில மணித்துளிகள் முன்பாகவே ஜொலிக்க தொடங்கியிருக்கிறது!

https://madraskural.com/wp-content/uploads/2022/06/VID-20220602-WA00381.mp4
வண்ணத் தேரோடும் வீதியிலே

வள்ளுவர் கோட்டம், அண்ணாநினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடம், அறிவாலயம், குமரிக்கடல் வள்ளுவர் சிலை, அண்ணா நூற்றாண்டு நூலகம் வண்ண விளக்குகளால் மிளிர்கிறது!

கலைஞர் கருணாநிதி- அறிஞர் அண்ணா – தந்தை பெரியார் நினைவுகளை அடையாளப் படுத்தும் இடங்களில், அலங்கார வேலைகள் கண்ணைப் பறிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

திமுகவினரின் மனங்களில் இரண்டறக் கலந்து விட்ட அடையாள நினைவிடங்கள், எந்த ஆண்டும் இல்லாதவாறு 2022- ஆம் ஆண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.

விடிகிற காலையில் இத்தனை வெளிச்ச அழகுக் காட்சிகளை பார்ப்பது இயலாத ஒன்று. நமக்குக் கிடைத்த ஜூன் 2-ம் தேதி நள்ளிரவுப் படங்களை திமுகவின் சின்னமும் நாளை உதிக்கப் போகும் அடையாளமும் கண்டிப்பாக மறைத்து விடும். சூரிய ஒளியில் வண்ண விளக்குகள் ஜொலிக்காதே!

விடிகிற காலை திமுகவினருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சிறப்பாய் அமைந்திருக்க கலைஞரின் HBD. 99 ஐ கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்! -ந.பா.சேதுராமன்

Exit mobile version