Madras Kural

வயலில் மின்சாரம் பாய்ந்து மாடுகள் பரிதாப சாவு…

வயல்வெளியில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி உள்ளிட்ட ஐந்து மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

திருவள்ளூர் மாவட்டம் கோளூர் கிராமத்தில் கால்நடைகள் அதேபகுதி வயல்வெளி மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது, மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பிகள் திடீரென அறுந்து விழுந்ததில் கன்றுக்குட்டி உள்ளிட்ட நான்கு மாடுகள் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. “அப்பகுதியில் உள்ள அனைத்து உயரழுத்த மின் கம்பிகளும் 30 ஆண்டுகளுக்கு முன்னே அமைக்கப் பட்டவை ஆகும். காலாவதியான உயரழுத்து மின்கம்பிகளால் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக மனித உயிர்கள் இப்படி பலியாவதற்கு முன்பாக காலாவதி உயரழுத்த மின் கம்பிகளை உடனடியாக மாற்ற வேண்டும்” என அந்தப் பகுதியில் வசிக்கும் மாடுகளை வளர்ப்போரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்.கோ.முத்து

Exit mobile version