திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் நேற்று திடீரென கொட்டித் தீர்த்த இடியுடன் கூடிய கனமழை காரணமாக வெப்பம் தணிந்து அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதனிடையே பெரும்பேடு கிராமத்தில் வயல்வெளியில் சரவணன் என்ற விவசாயி தனது உறவினர்கள் சிலருடன் பச்சைப்பயிறு அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது மின்னல் தாக்கியதில் சரவணன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சரவணன் மாமனார் வேம்புலி, மைத்துனி ஆதிலட்சுமி ஆகியோர் இதில் காயம் அடைந்தனர், அவர்களை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்.கோ.முத்து