Madras Kural

பரவிய பொய்ச் செய்தி… மீண்டும் விசாரித்த போலீசார்!

சென்னை மதுரவாயல், கிருஷ்ணாநகர் பகுதியில் கார் ஒன்று தீப்பற்றி எரிவதாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க மதுரவாயல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். காரின் உரிமையாளரும், பா.ஜ.க. மாவட்டச் செயலாளருமான சதீஷ் குமாரிடம் சம்பவம் குறித்து விசாரணை செய்தபோது, ‘குடும்ப பிரச்சனையில் தானே காரை எரித்து விட்டதாகவும், ஆகவே நடவடிக்கை தேவை இல்லை’ என போலீசில் எழுதிக் கொடுத்தார். சம்பவம் நடந்த மறுநாள், பா.ஜ.க. பிரமுகரின் கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டதாக தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி ஒளிபரப்பு ஆனது. குடும்பப் பிரச்சினையில் எரிக்கப்பட்ட கார், பெட்ரோல் குண்டு வீச்சால் எரிக்கப் பட்டதாக செய்தி வெளியானதால் போலீசார் டென்சன் ஆகிப் போனார்கள். உண்மை நிலவரத்தை மீண்டும் ஒருமுறை விசாரித்து தெரிந்து வரும்படி கோயம்பேடு போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ் பாபு போலீசாருக்கு உத்தரவிட்டார். மீண்டும் அதே காட்சி, அதே சதீஷ்குமாரிடம் அதே சப்- இன்ஸ்பெக்டர் சுதாகர் விசாரணை நடத்தினார். கார் எரிந்த இடத்திலிருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை கைப்பற்றி சோதித்தார். காரின் உரிமையாளர் சதீஷ் குமாரே காருக்கு தீ வைத்து எரித்தது காட்சிப் பதிவில் தெளிவாக தெரிந்தது. இந்நிலையில் மீண்டும் சதீஷ்குமாரை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துப் போய் விசாரணை செய்தனர். விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசி விட்டதாக தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி ஒளிபரப்பு ஆனது. குடும்பப் பிரச்சினையில் எரிக்கப்பட்ட கார், பெட்ரோல் குண்டு வீச்சால் எரிக்கப் பட்டதாக செய்தி வெளியானதால் போலீசார் டென்சன் ஆகிப் போனார்கள். உண்மை நிலவரத்தை மீண்டும் ஒருமுறை விசாரித்து தெரிந்து வரும்படி கோயம்பேடு போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ் பாபு போலீசாருக்கு உத்தரவிட்டார். மீண்டும் அதே காட்சி, அதே சதீஷ்குமாரிடம் அதே சப்- இன்ஸ்பெக்டர் சுதாகர் விசாரணை நடத்தினார். விசாரணையில், “தன்னுடைய மனைவி நகை வாங்கிக் கொடுக்க வற்புறுத்தி வந்ததாகவும், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியும் அவர் கேட்கவில்லை. காரை விற்று நகை வாங்கித் தருமாறு தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தார். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் கோபத்தில் காருக்கு நானே தீ வைத்து கொளுத்தினேன்” என்று சதீஷ்குமார் ஒப்புக் கொண்டதார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சதீஷ்குமாரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்… ஒரு வழியாக சதிவேலையில் கார் எரிப்பு என்ற பொய்ச்செய்தி மாறி, நடந்த உண்மை வெளியாகி பலரை காப்பாற்றி இருக்கிறது…

-சே-

Exit mobile version