Madras Kural

சிறப்பான தண்ணீர் சேமிப்பு தருணம் ?

https://madraskural.com/wp-content/uploads/2022/04/WhatsApp-Video-2022-04-24-at-4.16.00-PM.mp4

சுட்டெரிக்கும் ஏப்ரல் மாதத்து தொடர் வெய்யிலைப் பார்த்தால் எதிர்வரும் காலங்களில் கடும் வறட்சியும், தண்ணீர்ப் பஞ்சமும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்ல வேண்டும். அதே வேளையில் தண்ணீர் சேமிப்பும் பாதுகாப்பும் எப்போதுமே கேள்விக்குறியாகத்தான் இருந்து வருகிறது. திருப்பெரும்புதூர்- ஒரகடம் சந்திப்பு ராயல் என்பீல்ட் தொழிற்சாலைக்கு அருகில் சர்வீஸ் சாலையில்தான் இப்படி ஒரு காட்சியை தினமும் பார்க்க முடிகிறது. நீர் பெருகி ஓடிக் கொண்டிருக்கும் இடத்துக்கு மிக மிக நெருக்கத்தில்தான் தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அமைந்துள்ளது. இராட்சதக் குடிநீர்க் குழாய் இணைப்பு உடைந்து பல நாட்களாகவே இப்படி தண்ணீர் வெளியேறி வீணாகி கொண்டிருக்கிறது . ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் கூட இதை யாரும் கண்டு கொள்ளவில்லை…

-பிரீத்தி எஸ். –

Exit mobile version