Madras Kural

மண் கவ்வும் வியூக வகுப்பாளர்கள்…

ரேஸ்ல ஃபுல் ஃபார்ம்ல இருக்குற குதிரையா பாத்து செலக்ட் பண்ணிர வேண்டியது. நாம ஸ்பெஷலா ஒன்னும் கழட்டவேணாம், எல்லாத்தையும் மேற்படி குதிரையே கழட்டிக்கும்னு ‘வியூக’ மேதாவிகளுக்கு ஏற்கெனவே தெரியும். பிறகென்ன, குதிரை முன்னாடி வந்து Win box ல மூக்கைக் குத்திக்கிட்டு நின்னதும் ‘பாத்தியா ரிசல்ட்டை’ன்னு பீத்திக்க வேண்டியது. குதிரை ஓனர்சும் போதாக் குறைக்கு எல்லாப்புகழும் வியூகம் வகுத்த மேதாவிக்கே சேரும்னு சொல்லி; இன்னும் டிமாண்ட உண்டாக்க வேண்டியது.
2021-ல திமுகவுக்கு ரூட் கிளியராருந்தும் இந்த பீஹாரு பஞ்சவர்ணக்கிளிதான் தொண்ட கிச்கிச்சே இல்லாம நல்லா பாடும்னு பொறுப்பு குடுத்து பொட்டியும் குடுத்து தட்டியும் குடுத்து ஏதேதோ ஆச்சு. ஒரு மூத்த தலைவரு வேற, “நாங்க, அந்தாள தூக்கிட்டோம்னு எதிர்க்கட்சி ஏரியாவ்ல கதர்றாங்க”னு கிச்கிச்சி பண்ணாரு. சொந்தக்கட்சியோட பலமோ பலவீனமோ கொஞ்சம்கூட தெரியாமயே சீட்டைத் தேய்ச்சிக்கிட்டு ஒளறவேண்டியது…

பீஹாரிய பீஹாரி மண்ணுலயே ஓடவிட்டு ஸ்பைனல் ஃகார்டு நாப்பது துண்டா போறளவுக்கு உடைச்சு விட்டுட்டாங்க. இனி ஊருல ஒரு பைய ‘ஜீரோ’ லெவல் கூட வியூக வகுப்பாளரை நம்பப் போறது இல்ல. இந்த லட்சணத்துல புதுசா ஃபார்ம் பண்ணுன கட்சிக்கும் இவரைத்தான் பேசி அட்வான்ஸ்லாம குடுத்து விட்டாங்க. திடீர்னு ஒருநாள் அங்கயும் ஆள காணல. வெறும் பாடி சோடாதான் இதுன்னு ஒரு வேளை புதுக்கட்சி ஏரியாவ்ல கண்டு பிடிச்சுருப்பாங்க போல.

யேயப்பா பீஹார் ராசா… இங்க வூட்டுக்கு வூடு ஐடி ஏரியாவ்லவும், ஸ்ட்ராடெஜி மைதானத்திலயும், வியூக வகுப்பிலும் பின்னி பெடலெடுத்துட்டு பெடலே இல்லாம சைக்கிள் ஓட்டிட்ருக்காங்க.

கிளம்பு ராசா காத்து வரட்டும்…
என்னா அடி…

சேரான்

Exit mobile version