Madras Kural

தேர்தல் வழிகாட்டும் கையேடு| நூல்|

பெரிய உழைப்பு, அதைவிட பெரிய சமூக அக்கறை கைகோத்து நின்றால் மட்டுமே இப்படியொரு நூலை உருவாக்கமுடியும். 2026 சட்டமன்றத்தேர்தல் நேரத்தில் இதை கொண்டு வந்திருப்பது காலத்தே செய்தநற்செயல். நூலாசிரியர் திரு.ராஜா. கார்த்திகேயன். (மேனாள் கூடுதல் அரசு பிளீடர், மெட்ராஸ் ஐகோர்ட், மதுரை கிளை).

மின்னனு வாக்குப்பதிவு எந்திரம், 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை இடைத் தேர்தலிலும், ராஜஸ்தான், ம.பி. மாநிலங்கள் (தலா 5 தொகுதிகள்) மற்றும் டெல்லி (6 தொகுதிகள்) க்கான சட்டப்பேரவை இடைத் தேர்தல் என 16 தொகுதிகளில் பரிசோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டு; அதன்பின் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் (1999) ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது என்பது தொடங்கி E.V.M. எந்திரத்தின் நுழைவிலிருந்து தற்போது கண்டுள்ள முன்னேற்றம் வரையிலும் 127 பக்கங்களின் வாயிலாக பேசுகிறார் நூலாசிரியர்.

வேட்பாளர் வழிகாட்டும் கையேடு, வாக்கு சாவடி முகவர் கையேடு, வாக்கு எண்ணிக்கை மைய முகவர் வழிகாட்டும் கையேடு,வேட்புமனு படிவம் 2B – Nomination Paper/வேட்பாளர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டிய உறுதிமொழிப் பத்திரம் படிவம் -26 (குற்ற வழக்கு தொடர்பாக),

வேட்பாளர் தாக்கல் செய்ய வேண்டிய சொத்து விபரம் பற்றிய உறுதிமொழிப் பத்திரம்,வேட்பாளர் சட்டப்படி தாக்கல் செய்ய வேண்டிய உறுதிமொழிப் பத்திரம், வேட்பாளர் வேட்புமனு வாபஸ் (திரும்ப பெறுதல்) பெறும் படிவம் -5, வேட்பாளர் தேர்தல் முகவர் நியமனப் படிவம்,
வாக்குச்சாவடி முகவர் நியமனப் படிவம்,
தேர்தல் முடிவுச் சான்றிதழ் படிவம் Form 17C பகுதி I, தேர்தல் வாக்கு எண்ணிக்கை பதிவு செய்யும் வடிவம் Form 17C பகுதி II,

மாதிரி வாக்குப் பதிவு சான்றிதழ் படிவம்

EVM Form 17C-Watch Dog – Election Article /என ஒவ்வொரு பக்கமும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகவே கருதுகிறேன்.

கரைவேட்டிகள் பேசும்போது அடிக்கடி ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவர். “டேபிள் வொர்க்ல அந்த சைடுல ஆளுங்க எப்படி FIRE ஆ இருக்காங்களா, இல்லே உப்புமாவா”? என்பதே அந்த வார்த்தை. தேர்தல் பரபரப்பு காலங்களில் 1989- முதல் நான் கேட்டுக் கேட்டுப் பழகிய வார்த்தை அது.

அதை இந்த நூலில் பக்கம் 96- ல், “வாக்கு எண்ணிக்கை மேசை மாதிரி” என்ற அழகான தமிழ் தலைப்பில் Column 14- வரை பிரித்துப் போட்டு, மேஜிக் நடத்தியிருக்கிறார் மூத்த வழக்கறிஞரான ராஜா. கார்த்திகேயன்.

வேட்பாளர் படிவம், வேட்பாளர் தகுதிநிலை, சட்டச்சிக்கல், எந்த படிவத்தை எதற்குப் பயன்படுத்துவது, படிவமாதிரி போன்ற விஷயங்களோடு, ஒவ்வொன்றையும் வண்ணப் புகைப்படங்களோடு அடையாள வரிசையில் நிறுத்தியிருக்கிறார், நூலாசிரியர் ராஜா. கார்த்திகேயன். எழுத்துப் பிழை இல்லாமையும் நூலின் பலம். நூலின் விலை 600₹

ந.பா.சேதுராமன்

படங்கள் : (சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல் வெளியீடு நடைபெற்ற போது எடுக்கப் பட்டவை)

Exit mobile version