Madras Kural

ஆயிரம் ரூபாய் பிச்சைக்கு ஓட்டு கிடைக்குமா ? -குஷ்பு

தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசை கண்டித்து, சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் போதை ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக தேசிய மகளிர் ஆணைய தலைவியும், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான நடிகை குஷ்பு கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய நடிகை குஷ்பு, தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு சுலபமாக போதை பொருட்கள் கிடைக்கிறது எனவும், இதனை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை என்றும், 3500 கிலோ போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது,
அதேபோல் ஜாபர் சாதிக் திமுகவிற்கு நிதி அளித்துள்ளார் என்று குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்திலிருந்து போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போதை ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது இதற்கு முதல்வர் என்ன பதில் கூற போகிறார் என்று கேள்வி எழுப்பிய குஷ்பூ, ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் தாய்மார்கள் திமுகவிற்கு வாக்களித்து விடுவார்களா, ஏன் டாஸ்மாக்கை மூடுங்களேன், மதுபான கடைகளை மூடுவோம் என கலைஞரும், தேர்தலின் போது படிப்படியாக மது கடையை மூடுவோம் என மு. க. ஸ்டாலினும் கூறியதை தற்போது உதயாநிதி கூறுவதாகவும், பள்ளி கல்லூரி அருகிலேயே மதுபான கடைகள் இருக்கின்றன எனவும், வீட்டில் உள்ள தாய்மார்களின் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள் என பார்த்தால் டாஸ்மாக் பிரச்சனை தீரவில்லை, நடுவில் போதைப் பொருள் பிரச்சனை வேறு தமிழகத்தில் உள்ளது, திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் ஒவ்வொரு வீதியிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கும், முதலமைச்சர்பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இருப்பார்கள், காங்கிரசும் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கும், ராகுல் காந்தியும் என்ன பேசுவது என தெரியாமல் முழித்திருப்பார், கூட்டணியில் ஒன்பது சீட்டிற்காக அமைதியாக அவர் இருக்கிறார் என நடிகை குஷ்பு கூறினார்.
சொல்லப்போனால், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எந்த கட்சியும் தமிழ்நாட்டில் போதைப்புழக்கம் குறித்து எதுவும் பேசவில்லை, எல்லோருக்கும் போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தம் இருக்கிறது, எல்லோருக்கும் கட்டிங், கமிஷன் போவதாகத்தானே அர்த்தம் என குற்றம் சாட்டிய குஷ்பூ அதனால்தான் மக்கள் எப்படி போனால் என்ன என அவர்கள் நினைப்பதாகவும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடி பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணிப்பதாக பேசியதற்கு தமிழக முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன, இந்நிலையில் நடிகை குஷ்பூ, மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை பிச்சைப்பணம் என்று கூறியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஷ்புவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

P.K.M

Exit mobile version