Madras Kural

வெடிவெடித்து வாய்சிதறிய நாய்…

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரில், வீட்டின் அருகே வெடிவெடித்தது போல பலத்த சத்தம் கேட்டதாகவும், வெளியே வந்து பார்த்த போது அதே பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய் ஒன்று வாய்சிதறி ரத்தக் கறையுடன் உயிருக்கு போராடி
கொண்டிருந்ததாகவும், சிறிதுநேரத்தில் நாய் உயிரிழந்து
விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் ஐ.பி.சி. 286, 429 மற்றும் வெடிபொருள் சட்டம் 5 என 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர். விளைநிலத்தில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த
சட்ட விரோதமாக வெடி வைக்கப்பட்டு அதனை நாய் கவ்விக் கடித்ததால் தெருநாய் உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என மீஞ்சூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்.கோ.முத்து

Exit mobile version