Madras Kural

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை முக்கிய அறிவிப்பு…

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு நாட்டின் விடுதலை நாளில் முக்கிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம்:

“நாட்டின் 77வது விடுதலை நாளை இந்திய மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், ஆகஸ்ட் 14-ஐ “பிரிவினை பயங்கரத்தை நினைவு கூறும் நாளாக” (Partition Horrors Remembrance Day) அனுசரிக்கும் படி இந்திய பிரதமர் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவைத் தொடர்ந்து, பிரிவினை பயங்கரத்தை விவரிக்கும் ஆவணம் ஒன்றை இந்திய அரசு வெளியிட்டு, கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுவருவது வேதனை அளிக்கிறது.

சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் வரலாற்று நிகழ்வைச் சித்தரிக்கும் ஆவணத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது மிகவும் கவலை தருகிறது. இந்த ஆவணத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மக்களிடம் பகை உணர்வைத் தூண்டும் வகையில் எத்தகைய அனுசரிப்பும் இருக்கக் கூடாது என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள் வைக்கிறது”- இவ்வாறு

பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு

தெரிவித்துள்ளார்.

LT

Exit mobile version