Madras Kural

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி…

சென்னை தெற்கு மாவட்டம், புனித தோமையர்மலை (தெ) ஒன்றிய திமுக சார்பில் வேங்கை வாசல் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் பல்லோருக்கு அளிக்கப்பட்டது.

கல்விக்கு எப்போதும்கருணை!
விழாதொகுப்பு வீடியோ

வேங்கைவாசல் ஊராட்சிமன்றத் தலைவர், வி. ஜெயச்சந்திரன் தலைமை வகிக்க சோழிங்கநல்லூர் திமுக எம்.எல்.ஏ.வும் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி திமுக செயலாளருமான எஸ். அரவிந்த் ரமேஷ் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜி. வெங்கடேசன், வரவேற்றார்.
வேங்கைவாசல் சமூக நலகூடம் அருகில, ‘கலைநன்மணி’ ஆ.தே. முருகையன் கலைக்குழு வழங்கிய திராவிட திருவிழா தெருக்கூத்து நிகழ்வோடு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

திராவிட தெருக்கூத்து கலைநிகழ்ச்சி

அமைச்சர் மா. சுப்பிரமணியன், திராவிட திருவிழா தெருக்கூத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றியதோடு விழாவின் நிறைவில் தெருக்கூத்து கலைஞர்களை கவுரவித்தார்.

நலத்திட்ட உதவிகளாக 10 நபர்களுக்கு சலவைபெட்டி, 40 மகளிருக்கு தையல் இயந்திரம், ஏழ்மையான ஆட்டோ ஓட்டுநர்கள் 4 பேருக்கு ஆட்டோக்கள் மற்றும் 2ஆயிரம் பொதுமக்களுக்கு தலா 10கிலோ அரிசியை வேங்கைவாசல் ஊராட்சி மன்றத் தலைவர் வி.ஜெயச்சந்திரன் வழங்கினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசும்போது, “ஒரு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சி போல் ஊராட்சி மன்றத்தில் வைத்து இப்படியொரு நிகழ்ச்சியை நடத்திக் காட்டி ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை வழங்கி இருப்பது பிரமிக்க வைக்கிறது” என்று குறிப்பிட்டார்.

பொதுமக்களில் யாராவது மறைவெய்தி விட்டால் அவர்களை அடக்கம் செய்ய தேவைப்படும் அமரர் ஊர்தி, குளிர்சாதன பெட்டி, அமரர் ரதம், பந்தல் அமைக்க ஷாமியானா, நான்கு ஃபோகஸ் மின் விளக்குகள், பிளாஸ்டிக் நாற்காலிகள் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயச்சந்திரன், தமது சொந்த நிதியில் வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதேபோன்று, “பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையில் அந்த கல்வி கட்டண உதவியை முடிந்தளவில்
சொந்தப் பணத்தில் இருந்து ஜெயச்சந்திரன் அளித்து வருகிறார்” என அவரை நன்கறிந்த வேங்கைவாசல் ஊராட்சிமன்ற பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வியில் சிறந்து விளங்கும் பகுதியாக வேங்கை வாசல் ஊராட்சியை மாற்றியமைத்து, தான் சார்ந்துள்ள கட்சியான திமுகவுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார் ஜெயச்சந்திரன்.

தென் சென்னை திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், பாலவாக்கம் க.சோமு, பாலவாக்கம் த.விஸ்வநாதன், பாலவாக்கம் மு. மனோகரன் ஜெ.எழில் பாண்டியன், த.மனோநிதி, (ம) மாவட்ட, பகுதி, ஒன்றிய, ஊராட்சிமன்ற பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

பிரீத்தி எஸ்.

Exit mobile version