Madras Kural

மொத ரவுண்டே முடிச்சுருவேன் தம்பி|

க்ளவுசமாட்டிட்டாலே நான் ராயபுரம் பரம்பரைதான் தம்பி…

தலைவருக்குப்பிறகு உங்கக்கிட்ட. கொஞ்சிபேச இங்க நான்மட்டும்தான் இருக்கேன்…

குட்டிப்பாப்பா… நல்லாப்பாத்துக்கோ! ரெண்டுவிரலுன்னா ரெட்டைஇலை… உனுக்குப்பின்னால மரத்துல தெரியறதும் ரெட்டைஇலைதான்… 16வருஷத்துக்குப்பிறகும் இதே ராயபுரம் தொகுதிலதான் நிப்பேன்… ரெட்டை இலையப் பாத்து ஒரே குத்தா குத்திடணும் சரியா…

எல்லா சைடுலயும் இப்டி ஆரத்தி காட்டுனா கறுத்துப்போயிருவேன் தாயீ….

தொகுதியிலேயே சுத்துற பச்சைமலை சாமி நீங்கதான்

பேம்லில மொத்தம் அஞ்சு ஓட்டாச்சே… எங்கடா குட்டிப்பையா உங்கப்பாவும் தாத்தாவும்…

வேகாதவெய்யில்ல இப்பிடி திரண்டு வந்திருக்கீங்க…இருந்தாலும் பேம்லில கொஞ்சபேரை காணோம்… ஓட்டுப்போடற அன்னிக்கு ஒருத்தரு கூட மிஸ் ஆவக்கூடாது…

யாரோட செல்ஃபி போட்டோ நல்லா வரும்னு தெரியிலியே… நாலஞ்சு மொபைல்லு சுழலுதே….

பிரியாணி செம டேஸ்ட்டு தாயீ… நம்ம வூட்ல பிரியாணி செஞ்சா இந்த டேஸ்ட்டு வரமாட்டேங்குதே… தனியா இதுக்கு எதாவது COURSE போகணுமா…

ஃபாதர்… வாழ்த்து மட்டும்தானா… ஓட்டுப்போட வந்துருவீங்கல்ல…

“வெற்றிவேல் வெற்றிவேல்…” “அந்தப்பேரை சொல்லாதீங்கப்பா… அது சத்யராஜ் நடிச்சபடம். தலைவர் நடிச்ச ‘மதுரைவீரன்’ னு சொல்லுங்க…

“தலையில ஒரு டவலு துண்டுன்னு எதையாவது சுத்திக்கக் கூடாதா… செவ செவன்னு இருக்குற மூஞ்சி, வெய்யில்ல தீய்ஞ்சு போயிடும்பா….

“நீங்க ஏன் பிரச்சாரத்துக்கு கூட வரல்ல?”

“ஊட்லருக்குற ஆம்பிளைங்க நாலுபேரும் உங்க பின்னாலதான் சுத்தறாங்க… நான் வூட்டுக்கு வூடு பிட் நோட்டீஸ் குடுத்துக்குனுருக்கேன்… வேணாம்னா சொல்லுங்க… நானும் பிரசாரத்துக்கு கூடவே வர்றேன்”…

“கூட்டம் கம்மின்னு பேசிக்கிறாங்க அண்ணே…”

“அப்டியா … இந்த போட்டோவப்பாரு“…

👇

“தொகுதில 95% பேரு நம்ம பின்னாலதான் நிக்கறாங்க”..

“கவலையே படாதப்பா… தெருத் தெருவா எதுக்கு சுத்தறதுன்னு கேக்கறோம்…. நாங்களே MOBILE CANVAS பண்ணிடறோம்…”

ஆயிரங்கைகள் மறைத்து நின்றாலும்…

“புள்ளைங்க விசிலடிக்குதோன்னு பதறிட்டேன்…. ரெட்டை இலை…. ரெட்டை இலைன்னு போட்ட சத்தத்துல காது ரெண்டும் ங்ங்கொய்ய்ன்னு கேக்குது”

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சோம் என் சின்ன ராசா….

அடுத்த எலெக்சனுக்கு இன்னும் மூணு ஓட்டு கன்பர்ம்டு….

செங்கோல் கொடுத்தாச்சு… வெற்றி கிரீடமும் அணிவிச்சு முடிச்சாச்சு…

ஆக்கம் : என்.விவேக்

Exit mobile version