திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கரி கிருஷ்ண பெருமாள் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும், சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்து ஒன்றாக பக்தர்களுக்கு காட்சி தரும் அரியதொரு விழாவான சந்திப்பு உற்சவம் நடைபெற்றது.
இந்த நிலையில் 7 ஆம் நாளான இன்று (10.05.2023) சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றது இதில் அலங்கரிக்கப்பட்ட விஷ்ணு பாவனா ரதம் என்ற திருத்தேரில் கருகிருஷ்ண பெருமாள் எழுந்தருளினார். பெருந்திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று முழக்கம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்து வர செண்டை மேளமும் மங்கல வாத்தியமும் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கரி கிருஷ்ண பெருமாள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு கரி கிருஷ்ண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீப ஆராதனைகள் நடைபெற்றன, விழாவை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களிலும் பக்தர்களுக்கு அவன் அடியார்கள் அன்னதானம் வழங்கினர்.
பொன். கோ. முத்து