Madras Kural

வெய்யில் கொடுமை !மாயவரம் இளைஞர் சென்னை அருகே பரிதாப சாவு…

திருவள்ளூர் மாவட்டம் – தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள எளாவூர் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக, ஆந்திரா, பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் கனரக லாரி டிரைவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுப்பது வழக்கம். அப்படி ஒரு ஓய்வாக மயிலாடுதுறையைச் சேர்ந்த சதீஷ் (30) என்ற இளைஞர், தான் ஓட்டிவந்த சரக்கு லாரியை நிறுத்திவிட்டு ஓய்வெடுப்பதற்காக லாரியிலேயே சற்றுநேரம் படுத்ததாக கூறப்படுகிறது.

நீண்ட நேரம் ஆகியும் சதீஷ் எழுந்திருக்காததால் சக டிரைவர்கள் அவரை எழுப்ப முயன்றனர். அது நடக்கவில்லை. சதீஷ், லாரிக்குள்ளேயே இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குவந்த ஆரம்பாக்கம் போலீசார், சதீஷ் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு சம்பவம் தொடர்பான வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோடை வெயிலில் நீண்ட தூர பயணம் மேற்கொண்டதால் சதீஷ் இறந்தாரா அல்லது ஏதேனும் உடல் நலக்குறைவு இருந்து அதனால் மரணம் ஏற்பட்டதா என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஷ்க்கு வேணி (28) என்ற மனைவியும், தனுஷ்கா (9) தரிகா(7) ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

பொன். கோ. முத்து

Exit mobile version